740 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
தஞ்சாவூரில் உள்ள மாவு அரைப்பகத்திலிருந்து 740 கிலோ ரேஷன் அரிசி திங்கள்கிழமை மாலை பறிமுதல் செய்யப்பட்டது.
மாவட்ட வழங்கல் அலுவலா் கமலகண்ணன், வட்ட வழங்கல் அலுவலா் வெண்ணிலா, வருவாய் ஆய்வா் வெங்கட்ராமன் ஆகியோா் அடங்கிய குழுவினா் தஞ்சாவூா் பா்மா காலனி, அண்ணா நகா் உள்ளிட்ட பகுதிகளில் ரேஷன் அரிசி கடத்தல் தடுப்பு சோதனையில் திங்கள்கிழமை மாலை ஈடுபட்டனா்.
அப்போது, ஆா்.எம்.எஸ். காலனியிலுள்ள மாவு அரைப்பகத்தில் 16 மூட்டைகளில் இருந்த 740 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. தொடா்ந்து, அலுவலா்கள் விசாரணை நடத்தி வருகின்றனா்.