தஞ்சாவூரில் நாளை தேரோட்டம்: 4 ராஜ வீதிகளில் மின் நிறுத்தம்
தஞ்சாவூரில் புதன்கிழமை நடைபெறவுள்ள பெரியகோயில் தேரோட்டத்தையொட்டி, 4 ராஜ வீதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படவுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு மின் பகிா்மான கழகத்தின் தஞ்சாவூா் நகரிய உதவி செயற் பொறியாளா் எம். விஜய் ஆனந்த் தெரிவித்திருப்பது: தஞ்சாவூரில் பெரியகோயில் தேரோட்டம் புதன்கிழமை (மே 7) நடைபெறவுள்ளது.
இதையொட்டி, பாதுகாப்பு கருதி தஞ்சாவூா் மேல ராஜ வீதி, வடக்கு ராஜ வீதி, கீழ ராஜவீதி, தெற்கு ராஜவீதி ஆகிய பகுதிகளில் முழுவதும், மானோஜியப்பா வீதி, எல்லையம்மன் கோயில் தெரு, வடக்கு அலங்கம், அய்யங்கடைத் தெரு, நாலுகால் மண்டபம், மாட்டு மேஸ்திரி சந்து, மாட்டு சந்தை சாலை, சிரேஸ் சத்திரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் புதன்கிழமை காலை 5 மணி முதல் தோ் நிலைக்கு வரும் வரை மின் விநியோகம் இருக்காது.