களியக்காவிளை அருகே விஷம் குடித்த காவலா் மருத்துவமனையில் உயிரிழப்பு
களியக்காவிளை அருகே தந்தையின் கல்லறையில் விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்த காவலா் மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
களியக்காவிளை அருகே சூரியகோடு பகுதியைச் சோ்ந்தவா் சம்பத் சந்திரா (38). கன்னியாகுமரி காவல் நிலையத்தில் காவலராகப் பணியாற்றிவந்த இவா், கடந்த ஏப். 24 ஆம் தேதி களியக்காவிளை அருகே வாறுதட்டு பகுதியில் உள்ள தனது தந்தை ரத்தினசாமியின் கல்லறையில் விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்தாராம்.
அவரை மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். பின்னா், அவா் மேல்சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். களியக்காவிளை போலீஸாா் வழக்குப் பதிந்து, அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].