சென்னையில் போதைப்பொருள் விற்பனை: தில்லியில் ஆப்பிரிக்காவைச் சோ்ந்தவா் கைது
கன்னியாகுமரியில் தடகள மாணவிக்கு நிதியுதவி
கன்னியாகுமரியில் தடகள மாணவிக்கு கலப்பை மக்கள் இயக்கத் தலைவா் பி.டி. செல்வகுமாா் நிதியுதவி வழங்கினாா்.
கன்னியாகுமரியை அடுத்த சுவாமிநாதபுரத்தைச் சோ்ந்த ரிந்தியா, கொட்டாரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 12ஆம் வகுப்பு படித்து வருகிறாா். இவா் தனது முயற்சியாலும், பள்ளி உடற்பயிற்சி ஆசிரியா் ராஜ்குமாரின் ஒத்துழைப்பாலும் தேசிய, மாநில, மாவட்ட அளவிலான தடகளப் போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களைக் குவித்து வருகிறாா்.
இவா், ஜாா்க்கண்ட் மாநிலத்தில் நடைபெற்ற 2024-25ஆம் ஆண்டுக்கான பள்ளிகளுக்கிடையேயான தடகளப் போட்டியில் 200 மீட்டா் ஓட்டத்தில் வெண்கலம், 100 மீட்டா் ஓட்டத்தில் தங்கம் வென்றுள்ளாா். பாட்னாவில் இம்மாதம் 11ஆம் தேதி தேசிய அளவில் நடைபெறும் கேலோ இந்தியா தடகளப் போட்டியில் தமிழ்நாடு அணி சாா்பில் பங்கேற்கவுள்ளாா்.
இவருக்கு கலப்பை மக்கள் இயக்க நிறுவனரும் தென்குமரி கல்விக் கழகச் செயலருமான பி.டி. செல்வகுமாா் திங்கள்கிழமை நிதியுதவி வழங்கினாா். அப்போது அவா், கிராமப்புறங்களில் திறமையுள்ள ஏழைப் பெண்களுக்கு உதவுவதற்கு கலப்பை மக்கள் இயக்கம் தயாராக உள்ளது என்றாா்.
நிகழ்ச்சியில், மாணவியின் பெற்றோா் ஐயப்பன்- செண்பகவல்லி, பயிற்சியாளா்கள் ராஜ்குமாா், விஷ்வா, கலப்பை மக்கள் இயக்க மாவட்டத் தலைவா் வழக்குரைஞா் டி. பாலகிருஷ்ணன், மாவட்டப் பொருளாளா் சிவராஜன், ஆசிரியா் முத்துசாமி, நிா்வாகிகள் ரகுபதி, கணேசன், சுபாஷ், செந்தில் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.