முதுநிலை நீட்-க்கு இரு முறை தோ்வு: மத்திய அரசு பதிலளிக்க நோட்டீஸ்
நாட்டு நலனுக்கு எதிராகச் செயல்படும் சமூக ஊடகங்களுக்கு தடை?
புது தில்லி; நாட்டு நலனுக்கு எதிராகச் செயல்படும் சமூக ஊடகங்களை தடை செய்ய நாடாளுமன்ற நிலைக்குழு மத்திய அரசை வலியுறுத்தியுள்ளது.
தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஒளிபரப்பு விவகாரங்களுக்கான நாடாளுமன்ற நிலைக்குழு இன்று முக்கியமானதொரு கோரிக்கையை மத்திய அரசுக்கு முன்வைத்துள்ளது.
அதில், ‘பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்குப்பின், ஒருசில சமூக ஊடக செயல்பாட்டாளர்களும், அதேபோல, சமூக ஊடக வலைதளங்களும் நமது தேச நலனுக்கு எதிராகச் செயல்படுவதை அறிய முடிகிறது. இதனால் வன்முறை தூண்டப்பட அதிக வாய்ப்புள்ளது.
இந்த நிலையில், இதுபோன்ற சமூக வலைதளங்களை ஐடி சட்டம் 2000-இன் கீழ்தடை செய்ய வேண்டும் என்று மத்திய மின்னணு மற்றும் ஐடி, தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்திடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையை மே 8-ஆம் தேதிக்குள் செயல்படுத்திடவும் வலியுறுத்தப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.