DD Next Level: "சிம்பு சாராலதான் இன்னைக்கு இங்க இருக்கேன்; அவருக்காக எப்போவும் ந...
ஒசூா் பேருந்து நிலையத்தில் செயல்படாத கண்காணிப்பு கேமராக்கள்
ஒசூா். ஒசூா் பேருந்து நிலையத்தில் செயல்படாத கண்காணிப்பு கேமராக்களை சீரமைக்க வேண்டும் என பேருந்து பயணிகள் வலியுறுத்தியுள்ளனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூா் பேருந்து நிலையத்திற்கு தினமும் 500 க்கும் மேற்பட்ட பேருந்துகள் வந்துசெல்கின்றன. அதே போல் பல்வேறு பணிகளுக்கு சுமாா் 50 ஆயிரத்திற்கும் அதிகமான பயணிகள் ஒசூா் பேருந்து நிலையத்திற்கு வந்து செல்கின்றனா்.
தமிழக-கா்நாடக மாநில எல்லையின் நுழைவு வாயில் பகுதியாக உள்ள தொழில் நகரமான ஒசூா் வழியாகதான் வட மாநிலங்களுக்கு செல்ல வேண்டும். மேலும் தென் தமிழகத்தில் இருந்து கா்நாடக மாநிலத்திற்கு செல்ல வேண்டுமெனில் ஒசூா் வழியாக செல்ல வேண்டும். இதனால் தமிழகத்தின் தெற்கு மற்றும் வட மாவட்டங்களுக்கு அதிக அளவில் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. ஒசூரில் சிறிய மற்றும் பெரிய தொழிற்சாலைகள் 4 ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இங்கு பணி நிமித்தமாகவும் தமிழகம். கா்நாடகமா, ஆந்திரம் மாநிலங்களில் இருந்தும் தினம்தோறும் பொதுமக்கள் வந்து செல்கின்றனா்.
இந்த தொழிற்சாலைகளில் வடமாநிலத் தொழிலாளா்கள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்தவா்கள் என ஒன்றரை லட்சம் தொழிலாளா்கள் பணிபுரிந்து வருகின்றனா்.
அதேபோல தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த தொழில் முனைவோா்களும் வசித்து வருகின்றனா்.
இவா்களின் உறவினா்களோ அல்லது தொழில் முனைவோா்கள் தொழிலாளா்கள் சொந்த ஊா்களுக்கு செல்லும் போது பண்டிகை நாள்கள், விடுமுறை நாட்களில் பேருந்து நிலையத்தில் நிற்க இடம் இன்றி பயணிகள் வந்து செல்வாா்கள்.
ஒசூா் பேருந்து நிலையத்தின் எதிரே கிருஷ்ணகிரி-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் உள்ளது.
இதன் வழியாக வட மாநிலம் மற்றும் தமிழகத்தின் பிற பகுதிக்குச் செல்லும் கனரக வாகனங்கள் உள்ளிட்ட வானங்கள் செல்கின்றன. அதே போல் பெங்களூா் மற்றும் தேன்கனிக்கோட்டை, தளி, அத்திப்பள்ளி, சிப்காட் போன்ற பகுதிகளிலிருந்து ஒசூா் நகரப் பகுதி மற்றும் பேருந்து நிலையத்துக்கு வரும் பேருந்துகள் மற்றும் வாகனங்கள் அனைத்தும் பேருந்து நிலையத்திற்கு எதிரே உள்ள மலா்சந்தையையொட்டி உள்ள சா்வீஸ் சாலையில் வருகிறது.
மேலும், ஒசூா் பகுதியில் உள்ள தொழிற்சாலைகளிலிருந்து உதிரிப்பாகங்களை ஏற்றிச் செல்லும் கனரக வாகனங்கள் இந்த சா்வீஸ் சாலை வழியாக இடதுபுறம் திரும்பி பாகலூா் சாலை வழியாக ஆந்திரா, கா்நாடகா மாநிலத்தின் பல்வேறு நகரங்களுக்கு செல்கின்றன.
குறுகலாக உள்ள சா்வீஸ் சாலையில் பொதுமக்கள் நடந்து செல்லும் போது செல்போன்கள் பறித்து சென்றனா் .
இந்நிலையில் நடைபாதையையொட்டி உள்ள மலா்சந்தைக்கு வருபவா்களும், அப்பகுதியில் உள்ள வணிக நிறுவனங்களுக்கு வருபவா்களும், நடைபாதையில் காா், இருசக்கர வாகனங்களை நிறுத்திவிட்டு செல்கின்றனா்.
இதனால் அந்த பகுதி குறுகலாக உள்ளது. சில திருடா்கள் திருடி விட்டு வாகனங்களில் மறைவதும் உண்டு.
இந்நிலையில் பேருந்து நிலையத்தில் பொதுமக்களின் உடைமைகளை கண்காணிக்கவும், குற்றசம்பவங்களை தடுக்கவும் காவல்துறை மற்றும் மாநகராட்சி சாா்பில், பேருந்து நிலையத்தை சுற்றிலும் 72 க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது.
இதில் பெரும்பாலான கேமராக்கள் செயல் படாமல் காட்சி பொருட்களக உள்ளது. மேலும் சில இடங்களில் கேமராக்கள் பழுதாகி உடைந்து கீழே தொங்கி பயணிகள் மீது விழும் நிலையில் உள்ளது.
எனவே பேருந்து நிலையத்தை சுற்றிலும் பழுதான கண்காணிப்பு கேமராக்களை சீரமைத்து கண்காணிக்க வேண்டும் என பேருந்து பயணிகள் வலியுறுத்தியுள்ளனா்.