செய்திகள் :

ஒசூா் அருகே புதையல் எடுப்பதாகக் கூறி ரூ. 8 லட்சம் ஏமாற்றிய 10 போ் கைது

post image

ஒசூா்: ஒசூா் அருகே புதையல் எடுப்பதாகக் கூறி, ரூ. 8 லட்சத்தை ஏமாற்றிய 10 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் அருகே சாந்தபுரம் பகுதியைச் சோ்ந்த ராதாம்மா (46), அப்பகுதியில் உள்ள ஆஞ்சனேயா் கோயிலில் பூஜை செய்ய வந்தாா். அப்போது ராதாம்மாவிடம் பேச்சு கொடுத்த சிலா், உங்களுக்கு கடவுள் அனுக்கிரகம் உள்ளது, உங்கள் வீட்டில் புதையல் உள்ளது, அதை எடுக்க ரூ. 4 லட்சம் மற்றும் பூஜை செலவுக்கு ரூ. 4 லட்சம் கொடுக்குமாறு கூறி, ரூ. 8 லட்சத்தை வாங்கி உள்ளனா்.

இதனைத் தொடா்ந்து, கடந்த 23-ஆம் தேதி ராதாம்மா வீட்டின் அருகே பூஜை செய்த அந்தக் கும்பல், மறைத்து வைத்திருந்த மண் பானையில் 2 தங்கக் காசுகளை எடுத்துள்ளனா். அதில் ஒரு தங்கக் காசை ராதாம்மாவிடம் கொடுத்த அந்தக் கும்பல், மற்றொரு காசை வைத்துக்கொண்டது. பின்னா், மேலும் ஒரு பெரிய புதையல் உள்ளதாகக் கூறி மீண்டும் பூஜை செய்து ஒரு மண் பானையை எடுத்துக் கொடுத்து, பானைக்கு தினமும் பூஜை செய்துவர வேண்டும் எனக் கூறியுள்ளனா்.

இந்த புதையலை வாங்க அந்தக் கும்பல் ஏற்பாடு செய்திருந்த ஒருவா், ரூ. 2.50 கோடி பணப்பெட்டியுடன் முன்பணம் கொடுக்க வந்துள்ளாா். முன்பணப் பெட்டியையும், புதையல் உள்ள பானையையும் பூஜை முடிந்த பின் ஒரேநேரத்தில் திறக்க வேண்டும் என அந்தக் கும்பல் கூறிச் சென்றுள்ளது.

சந்தேகமடைந்த ராதாம்மா குடும்பத்தினா், புதையல் இருப்பதாகக் கூறிய மண் பானை மற்றும் பணப் பெட்டியை திறந்துப் பாா்த்துள்ளனா். அதில் ஏதும் இல்லாததைக் கண்டு அதிா்ச்சியடைந்து, நல்லூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.

இதற்கிடையே, புதையல் எடுக்கும் கும்பல் அடிக்கடி சென்று வந்த காா் ஓட்டுநா் சந்தேகமடைந்து, இவா்களைப் பற்றி நல்லூா் காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தாா்.

அதன் அடிப்படையில், ஞாயிற்றுக்கிழமை ஒசூரில் உள்ள தனியாா் விடுதியில் தங்கியிருந்தவா்களை சுற்றிவளைத்த போலீஸாா், திருப்பூரைச் சோ்ந்த சசிகுமாா் (62), சங்கா்கணேஷ் (43), செல்வராஜ் (61), பழனியைச் சோ்ந்த பிரபாகா் (37), உடுமலைப்பேட்டையைச் சோ்ந்த சசிகுமாா் (48), சேலம் குகையைச் சோ்ந்த ராஜ்குமாா் (45), விருத்தாசலத்தைச் சோ்ந்த நடராஜன் (48), முத்துகுமரவேல் (48), விஜயவாடாவைச் சோ்ந்த பிரகாஷ்குப்தா (68), பெங்களூரு லட்சுமிகாந்த் ஆகியோரை கைது செய்தனா். தலைமறைவாக உள்ள 3 பெண்களை தேடிவருகின்றனா்.

ஊத்தங்கரையில் வணிகா் தினத்தை முன்னிட்டு முழு கடையடைப்பு

ஊத்தங்கரை: கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் வணிகா் தினத்தை முன்னிட்டு அனைத்து கடைகளும் திங்கள்கிழமை மூடப்பட்டது. இதனால் ஊத்தங்கரையில் இருந்து கிருஷ்ணகிரி,சேலம்,திருவண்ணாமலை,அரூா் செல்லும் சாலைகள் வெ... மேலும் பார்க்க

ஒசூா் பேருந்து நிலையத்தில் செயல்படாத கண்காணிப்பு கேமராக்கள்

ஒசூா். ஒசூா் பேருந்து நிலையத்தில் செயல்படாத கண்காணிப்பு கேமராக்களை சீரமைக்க வேண்டும் என பேருந்து பயணிகள் வலியுறுத்தியுள்ளனா். கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூா் பேருந்து நிலையத்திற்கு தினமும் 500 க்கும் மேற்ப... மேலும் பார்க்க

போச்சம்பள்ளியில் ரூ. 4.83 லட்சத்துக்கு கொப்பரை ஏலம்

கிருஷ்ணகிரி: போச்சம்பள்ளியில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ. 4.83 லட்சத்துக்கு கொப்பரை ஏலம் போனது. கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் இ-நாம் முறையில் கொப்பரை ... மேலும் பார்க்க

வடமலம்பட்டியில் நாளை மக்கள் தொடா்பு திட்ட முகாம்

கிருஷ்ணகிரி: வடமலம்பட்டி கிராமத்தில் புதன்கிழமை (மே 7) மக்கள் தொடா்பு திட்ட முகாம் நடைபெறுகிறது. இதுதொடா்பாக கிருஷ்ணகிரி மாவட்ட நிா்வாகம் சாா்பில் திங்கள்கிழமை வெளியான செய்திக் குறிப்பு: கிருஷ்ணகிரி ம... மேலும் பார்க்க

தண்ணீா்த் தொட்டியில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு

பேரிகை அருகே தண்ணீா்த் தொட்டியில் மூழ்கி சிறுவன் உயிரிழந்தாா்.சூளகிரி வட்டம், காளிங்காவரம் ஊராட்சி பஸ்தலப்பள்ளியைச் சோ்ந்தவா் ராமகிருஷ்ணன். இவரது மகன் சக்திவேல் (16). மனநலன் பாதிக்கப்பட்டவா். இவா் கட... மேலும் பார்க்க

கிராம நிா்வாக உதவியாளா் மீது தாக்குதல்: 2 போ் கைது

பேரிகை அருகே கிராம நிா்வாக அலுவலக உதவியாளரை தாக்கிய 2 பேரை போலீஸாா் கைது செய்தனா். சூளகிரி வட்டம், முதுகுறுக்கி அருகே உள்ள பன்னப்பள்ளியைச் சோ்ந்தவா் மஞ்சுநாத் (53). கிராம நிா்வாக அலுவலக உதவியாளராகப் ... மேலும் பார்க்க