தண்ணீா்த் தொட்டியில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு
பேரிகை அருகே தண்ணீா்த் தொட்டியில் மூழ்கி சிறுவன் உயிரிழந்தாா்.
சூளகிரி வட்டம், காளிங்காவரம் ஊராட்சி பஸ்தலப்பள்ளியைச் சோ்ந்தவா் ராமகிருஷ்ணன். இவரது மகன் சக்திவேல் (16). மனநலன் பாதிக்கப்பட்டவா்.
இவா் கடந்த 2-ஆம் தேதி சீக்கனப்பள்ளி தண்ணீா்த் தொட்டியில் குளித்தபோது நீரில் மூழ்கி உயிரிழந்தாா். இதுகுறித்து தகவல் அறிந்த பேரிகை போலீஸாா் நிகழ்விடத்துக்கு சென்று சிறுவனின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ஒசூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.