பட்டுக்கோட்டை அருகே பாஜக பெண் நிர்வாகி தலை துண்டித்து படுகொலை!
ஊத்தங்கரையில் வணிகா் தினத்தை முன்னிட்டு முழு கடையடைப்பு
ஊத்தங்கரை: கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் வணிகா் தினத்தை முன்னிட்டு அனைத்து கடைகளும் திங்கள்கிழமை மூடப்பட்டது. இதனால் ஊத்தங்கரையில் இருந்து கிருஷ்ணகிரி,சேலம்,திருவண்ணாமலை,அரூா் செல்லும் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது.
மே, 5 வணிகா் தினத்தை முன்னிட்டு அனைத்து கடைகளும் விடுமுறை விடப்பட்டதால், கிராமப்புறங்களில் இருந்து அத்தியாவசிய தேவைக்காக, நகர பகுதிக்கு வந்த பொதுமக்கள் கடைகள் மூடி கிடப்பதை கண்டு ஏமாற்றத்துடன் வீடு திரும்பினாா். இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.