பஹல்காம் தாக்குதல்: கடற்படை அதிகாரியின் குடும்பத்தினருடன் ராகுல் சந்திப்பு!
ஒரே நாளில் எகிறிய தங்கம் விலை!
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(மே 6) சவரனுக்கு ரூ. 2000 உயர்ந்து ரூ. 72,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை கடந்த சில நாள்களாக குறைந்துவந்த நிலையில், மே 3-ஆம் தேதி விலையில் மாற்றமின்றி கிராம் ரூ. 8,755-க்கும், சவரன் ரூ. 70,040-க்கும் விற்பனையானது.
அதைத் தொடர்ந்து வாரத்தின் முதல் நாளான திங்கள்கிழமை கிராமுக்கு ரூ. 20 உயர்ந்து ரூ. 8,775-க்கும், சவரனுக்கு ரூ. 160 உயர்ந்து ரூ. 70,200-க்கும் விற்பனையானது.
இந்த நிலையில், இன்று ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 2000 உயர்ந்து ரூ. 72,200-க்கும் கிராமுக்கு ரூ. 250 உயர்ந்து ரூ. 9,025-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை கிராமுக்கு 10 காசுகள் குறைந்து ரூ. 107.90-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ. 100 குறைந்து ரூ. 1,07,900-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதையும் படிக்க: திருச்சூரில் பூரம் திருவிழா கோலாகலம்!