சாலை வசதியின்றி மயானத்துக்கு உடலை எடுத்துச்செல்ல சிரமப்படும் கிராம மக்கள்!
திருச்சூரில் பூரம் திருவிழா கோலாகலம்!
கேரள மாநிலத்தில் புகழ்பெற்ற திருச்சூர் பூரம் திருவிழாவில் இன்று(மே 6) அதிகாலை 5 மணிக்கு கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது.
கேரளத்தில் மிகவும் முக்கிய திருவிழாவான பூரம் திருவிழா, பழமை வாய்ந்த திருச்சூர் வடக்குநாதர் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் பூரம் நட்சத்திரம் அன்று வெகு விமர்சையாகக் கொண்டாடப்படுவது வழக்கம்.
அதன்படி, இன்று காலை கணிமங்கலம் சாஸ்தா கோயிலில் இருந்து 8 உற்சவ மூர்த்திகள் எழுந்தருளி அலங்கரிக்கப்பட்ட யானைகளின் அணிவகுப்புடன் வடக்கு நாதர்சிவன் கோயிலுக்கு புறப்பட்டார்.
இதையடுத்து பஞ்சவாத்தியம் உள்ளிட்ட பல்வேறு மேளங்கள் இசைக்கப்பட்டன. மிகவும் பிரபலமான இலஞ்சித்தறை மேளம் என அழைக்கப்படும் செண்டை மேளம் இசைக்கப்பட்டது. இதில் 250-க்கும் மேற்பட்ட இசைக் கலைஞர்கள் கலந்துகொண்டனர்.
திருவிழாவின் முக்கிய நிகழ்வான யானைகள் அணிவகுப்பும் குடை மாற்றும் நிகழ்வும் இன்று மாலை நடைபெறுகிறது. நண்பகல் 12 மணிக்கு பகவதி அம்மன் எழுந்தருளவுள்ளார்.
திருச்சூர் பூரம் திருவிழாயொட்டி வடக்குநாதர் கோயிலில் பலத்த காவல் துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: 12-வது நாளாக அத்துமீறி துப்பாக்கிச் சூடு நடத்திய பாக். ராணுவம்: இந்தியா பதிலடி!