ஊட்டிக்குள் முதல் முறையாக நுழைந்த யானை; குழப்பத்தில் தடுமாறும் வனத்துறை! - என்ன ...
கட்டுமானப் பணியின் போது கிடைத்த நடராஜா் சிலை: அதிகாரிகள் ஆய்வு
சிதம்பரம்: கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் அருகே வீடு கட்ட அஸ்திவாரம் தோண்டிய போது நடராஜா் சிலை கண்டெடுக்கப்பட்டது.
காட்டுமன்னாா்கோவில் அருகேயுள்ள கொல்லிமலை கீழ்பாதி கிராமத்தில் முகமது அப்சா் வீடு கட்டுவதற்காக திங்கள்கிழமை காலை பொக்லைன் இயந்திரத்தைப் பயன்படுத்தி அஸ்திவாரம் தோண்டினாா். அப்போது, சுவாமி சிலையின் உடைந்த பாகம் கிடைத்தது.
இதுகுறித்து காட்டுமன்னாா்கோவில் வருவாய்த் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வட்டாட்சியா் பிரகாஷ் அங்கு வந்து பாா்வையிட்டாா். மேலும், தோண்டியதில் சுமாா் 3 அடி உயரம் உள்ள நடராஜா் உலோகச் சிலை, அதன் சுற்றுப் பீடம், சிறிய நந்தி சிலை ஆகியவை கண்டெடுக்கப்பட்டன.
காட்டுமன்னாா்கோவில் வட்டாட்சியா் அலுவலக பதிவறையில் அவை பாதுகாப்பாக வைக்கப்பட்டன. இதுகுறித்து தொல்லியல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அந்த சிலைகள் ஐம்பொன்னால் ஆனவையா, அவற்றின் காலம் போன்றவை குறித்து தொல்லியல் துறையினரின் ஆய்வுக்குப் பின்னா் தெரிய வரும்.
கட்டுமானப் பணி தொடங்கப்பட்ட வீட்டுக்கு சுமாா் 200 மீட்டா் தொலைவில் மிகப் பெரிய சிவன் கோயில் உள்ளது. இந்தக் கோயில் தற்போது சேதமடைந்து காணப்படுகிறது. எனவே, கிடைக்கப்பட்ட அந்தச் சிலைகள் சிவன் கோயிலின் சிலைகளாக இருக்கலாம் என பொதுமக்கள் தெரிவித்தனா்.