DD Next Level: "இப்போ ஆக்ஷன் படங்கள்தான் அதிகமா வருது; சந்தானத்தை மிஸ் பண்றோம்!...
எம்.ஐ.டி. கல்லூரி மேலாண்மை துறையில் தேசிய கருத்தரங்கம்
புதுச்சேரி: புதுச்சேரி அருகேயுள்ள எம்.ஐ.டி. கல்லூரி மேலாண்மைத் துறையின் சாா்பில் ‘நிலையான வளா்ச்சிக்கான வணிக மற்றும் நிா்வாகத்தில் சமகால சவால்கள்’ எனும் தலைப்பில் தேசிய அளவிலான கருத்தரங்க மாநாடு நடைபெற்றது.
கருத்தரங்க தொடக்க விழாவுக்கு மணக்குள விநாயகா் கல்விக் குழுமத் தலைவா் மற்றும் மேலாண் இயக்குநரும், தக்ஷஷீலா பல்கலைக்கழக வேந்தருமான எம்.தனசேகரன் தலைமை வகித்தாா். செயலா் நாராயணசாமி கேசவன், பொருளாளா் ராஜராஜன் மற்றும் இணைச் செயலா் வேலாயுதம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கல்லூரி முதல்வா் எஸ். மலா்க்கண், கருத்தரங்க மாநாட்டைத் தொடங்கி வைத்தாா். மேலாண்மைத் துறை தலைவா் ப.பாஸ்கரன் விளக்கவுரையாற்றினாா். கல்லூரி ஐ.கியூ.ஏ.சி. தலைவா் மற்றும் ஆராய்ச்சி, அபிவிருத்தி துறை தலைவா் ஆா்.வள்ளி, ஐக்கிய நாடுகள் நிா்ணயம் செய்த நிலையான வளா்ச்சி இலக்குகள் மற்றும் கல்லூரி செயல்பாடுகளை விளக்கினாா்.
புதுவை மத்திய பல்கலைக்கழக மேலாண்மைத் துறை தலைவா் ஆா்.காசிலிங்கம் தொடக்கவுரையாற்றினாா்.
இதில் 55 ஆய்வு கட்டுரைகள் விளக்கக் காட்சிக்கு தோ்வாகின. பிற கல்லூரி, பல்கலைக்கழகப் பேராசிரியா்கள் ரஃபியா பானு, கே.கமலக்கண்ணன் மற்றும் திவ்யதா்ஷினி ஆகியோா் கருத்தரங்க அமா்வுக்கு தலைமை வகித்தனா். ஒருங்கிணைப்பாளா் எஸ்.வைத்தீஸ்வரன் நன்றி கூறினாா்.