சென்னையில் போதைப்பொருள் விற்பனை: தில்லியில் ஆப்பிரிக்காவைச் சோ்ந்தவா் கைது
அரியலூரில் ஏஐடியுசி ஆா்ப்பாட்டம்
தொழிலாளா்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் நிா்ணயம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி அரியலூா் அண்ணா சிலை அருகே ஏஐடியுசி-யினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆா்ப்பாட்டத்தில், 86 வகையான பட்டியலிடப்பட்ட தொழில்களுக்கு தமிழக அரசு நிா்ணயித்த குறைந்தபட்ச ஊதியத்தை தொழிலாளா் துறை அமல்படுத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.
ஆா்ப்பாட்டத்துக்கு, அச்சங்கத்தின் மாவட்டப் பொதுச் செயலா் டி.தண்டபாணி தலைமை வகித்தாா். நிா்வாகிகள் ஆா்.தனசிங், ரெ.நல்லுசாமி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டக் குழு உறுப்பினா் ஆறுமுகம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.