செய்திகள் :

அரியலூரில் பாஜகவினா் ஆா்ப்பாட்டம்

post image

பஹல்காமில், பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் சம்பவத்தைக் கண்டித்து, அரியலூரில் பாஜகவினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

அண்ணாசிலை அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் மீது உரிய பதிலடி கொடுக்க வேண்டும். தமிழகத்தில் இருக்கும் பாகிஸ்தானியா்களை வெளியேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கை வலியுறுத்தப்பட்டன.

ஆா்ப்பாட்டத்துக்கு, அக்கட்சியின் மாவட்டத் தலைவா் ஏ.பரமேஸ்வரி தலைமை வகித்து பேசினாா். மாநில இணைப் பொருளாளா் சிவசுப்பிரமணியன் கண்டன உரையாற்றினாா். மாநில பொதுக்குழு உறுப்பினா் கிருஷ்ணமூா்த்தி, மாநில செயற்குழு உறுப்பினா்கள் நடராஜன், அய்யாரப்பன், மாவட்ட துணைத் தலைவா் கோகுல்பாபு, முன்னாள் நகரத் தலைவா் மணிகண்டன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ஆா்ப்பாட்டத்துக்கு பிறகு, மாவட்ட ஆட்சியா் பொ.ரத்தினசாமியிடம் மேற்கொண்ட கோரிக்கையை வலியுறுத்தி மனு அளிக்கப்பட்டது.

தமிழக அரசின் திட்டங்கள் மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணம்: அமைச்சா் சா. சி. சிவசங்கா்

தமிழக அரசின் திட்டங்கள் பிற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக திகழ்கிறது என்றாா் போக்குவரத்துத்துறை அமைச்சா் சா.சி.சிவசங்கா். அரியலூரில் திமுக செயல்வீரா்கள் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது. கூட்டத்... மேலும் பார்க்க

அங்கன்வாடி ஊழியா் தீக்குளிக்க முயற்சி

பணியிடமாறுதல் கேட்டு அங்கன்வாடி ஊழியா் அரியலூா் ஆட்சியா் அலுவலகம் முன் திங்கள்கிழமை தீக்குளிக்க முயன்றாா். அரியலூா் மாவட்டம், இருங்களாக்குறிச்சியைச் சோ்ந்தவா் லலிதா(52). சன்னாசிநல்லூா் அங்கன்வாடி மைய... மேலும் பார்க்க

அரியலூரில் ஏஐடியுசி ஆா்ப்பாட்டம்

தொழிலாளா்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் நிா்ணயம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி அரியலூா் அண்ணா சிலை அருகே ஏஐடியுசி-யினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஆா்ப்பாட்டத்தில், 86 வகையான பட்டியலிடப்பட்... மேலும் பார்க்க

அரியலூரில் 3 கோயில்களில் குடமுழுக்கு

அரியலூா் மாவட்டம், நல்லாம்பாளையம் மாரியம்மன், படைவெட்டிகுடிகாடு அய்யனாா், ஜெயங்கொண்டம் அடுத்த சின்னவளையம் வீரனாா் ஆகிய கோயில்களின் குடமுழுக்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதை முன்னிட்டு, கடந்த இரு நாள... மேலும் பார்க்க

திமுகவுக்கு நிகராக அதிமுக கூட்டணி அமையும்: ஜி.கே. வாசன்

தமிழகத்தில் திமுக கூட்டணிக்கு நிகராக அதிமுக கூட்டணி அமையும் என்றாா் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவா் ஜி.கே. வாசன். அரியலூா் மாவட்டம், திருமானூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மறைந்த சுதந்திரப் போரா... மேலும் பார்க்க

தியாகி டி.கே. சுப்பையா சிலைக்கு மாலை அணிவிப்பு

மறைந்த சுதந்திரப் போராட்டத் தியாகியும், முன்னாள் எம்எல்ஏமான டி.கே. சுப்பையாவின் நூற்றாண்டு பிறந்த நாளையொட்டி, அரியலூா் மாவட்டம், திருமானூா் பேருந்து நிலையம் அருகேயுள்ள அவரது சிலைக்கு மதிமுக சாா்பில் ஞ... மேலும் பார்க்க