செய்திகள் :

Travis Head நடித்த விளம்பரத்தை தடை செய்ய RCB மனு; தள்ளுபடி செய்த நீதிபதி - என்ன நடந்தது?

post image

IPL தொடரில் அதிக ரசிகர்களைக் கொண்ட அணிகளில் ஒன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB).

சமீபத்தில் ஹைதராபாத் வீரர் ட்ராவிஸ் நடித்து ஊபெர் மோட்டோ வெளியிட்ட யூடியூப் விளம்பரம், தங்களை அவமதிப்பதாக உள்ளது என ஆர்.சி.பி அணி அளித்த மனுவை தள்ளுபடி செய்துள்ளது டெல்லி உயர் நீதிமன்றம்.

இந்த விளம்பரம் (அணிகளுக்கு இடையில்) எந்த குறுக்கீடையும் கொண்டிருக்கவில்லை எனக் கூறியுள்ளார் நீதிபதி சவுரப் பானர்ஜி.

RCB
RCB

அவர், "குற்றம் சாட்டப்பட்ட விளம்பரம் கிரிக்கெட் விளையாட்டின் சூழலில் அமைந்துள்ளது, இது ஒரு போட்டி மனப்பான்மை உள்ள விளையாட்டு, எங்கள் பார்வையில், இதில் நீதிமன்றம் தலையிட எந்த தேவையும் இல்லை" எனக் கூறியுள்ளார்.

மேலும், "இதுபோன்ற வழக்கில் இந்த நேரத்தில் நீதிமன்றம் தலையிடுவது என்பது, மனுதாரர் கீழே விழமாட்டார் என்ற உத்தரவாதத்துடன் தண்ணீரில் நடக்க வைப்பதற்கு சமம். இதனால் வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது" எனக் கூறியுள்ளார்.

முன்னதாக விளம்பரம் எந்தவகையில் அவமதிப்பதாக அமைந்துள்ளது என்பதை எடுத்துரைத்த ஆர்.சி.பியின் வழக்கறிஞர், "விளம்பரத்தில் அந்த கிரிக்கெட் வீரர் "Bengaluru vs Hyderabad" என்ற அறிவிப்பு பலகையை சேதப்படுத்தும் நோக்கில் ஸ்டேடியத்துக்குள் நுழைக்கிறார்.

Ad
Ad

பின்னர் அந்த பலகையில் ராயல்லி சேலஞ்ச்ட் பெங்களூரு என மாற்றுகிறார். இது ஆ.ர்.சிபியின் அடையாளத்தை இழிவுபடுத்தும் செயல்." எனப் பேசியுள்ளார்.

ஒரு அணி குறித்து எதிர்மறையாக சித்தரிப்பது இழிவுபடுத்தும் செயல் என்று வாதிட்டார் அவர். மேலும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஐபிஎல் அணியின் கமர்ஷியல் ஸ்பான்சராக இருக்கும் உபர் மோட்டோ, சவாரி முன்பதிவு செய்யும் அதன் தயாரிப்பை விளம்பரப்படுத்தும் போது, ​​ஆர்சிபியின் வர்த்தக முத்திரையைப் பயன்படுத்தியது தவறு என்றும் கூறியுள்ளார்.

ஊபர் நிறுவனத்தின் சார்பில், "ஆர்.சி.பி அணி பொதுமக்களின் நகைச்சுவை உணர்வை கடுமையாக குறைத்து மதிப்பிட்டுள்ளது" என வாதிடப்பட்டது. விளம்பரங்களில் நகைச்சுவை உணர்வும் கேலிப்பேச்சும் இருப்பது இயல்பானதே என்றும் வாதிட்டனர்.

ஊபர் மோட்டோவின் விளம்பரம் தற்போது வைரலாகி வருகிறது.

Kohli: 'அடுத்த சச்சின் நான்தான்னு விராட் சொல்லிட்டே இருப்பாரு...' - கோலி குறித்து பள்ளி ஆசிரியர்

இந்திய கிரிக்கெட்டின் முடி சூடா மன்னராக திகழும் விராட் கோலி டி20, ஓடிஐ, டெஸ்ட் என மூன்று பார்மட் கிரிக்கெட் தொடரிலும் பல்வேறு சாதனைகளைப் படைத்திருக்கிறார். ஐபிஎல் தொடரிலும் சிறப்பாக விளையாடி வருகிறார்... மேலும் பார்க்க

'கோலியை அப்படி சொல்லாதீங்க; ஆர்சிபி அணியின் Mr. Safety அவர்தான்' - கோலி குறித்து ஏபி டிவில்லியர்ஸ்

பெங்களூரு அணிக்காக கோலி ஒவ்வொரு சீசனிலுமே சிறப்பாக ஆடி வருகிறார். ஆனாலுமே தொடர்ந்து அவர் மீது அவர் மெதுவாக ஆடுகிறார் என்கிற விமர்சனம் உண்டு. விராட் கோலிஅதற்கு பதிலளிக்கும் வகையில் பெங்களூரு அணியின் மு... மேலும் பார்க்க

Delhi Capitals: 'டேபிள் டாப்பர் டு ப்ளே ஆப்ஸ் போராட்டம்!- டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி எங்கே சறுக்கியது?

'சொதப்பல் டெல்லி!'சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளுக்கிடையேயான போட்டி மழையால் பாதிக்கப்பட்டு பாதியிலேயே நிறுத்தப்பட்டிருக்கிறது. இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளி வழங்கப்பட்டிருக்கி... மேலும் பார்க்க

PBKS vs LSG: Catches win the Matches; பூரானின் அந்த மிஸ்டேக்; பஞ்சாப் பயன்படுத்திக்கொண்டது எப்படி?

தர்மசாலாவில் பஞ்சாப் அணிக்கும் லக்னோ அணிக்கும் நேற்று ஐ.பி.எல் போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற லக்னோ கேப்டன் ரிஷப் பண்ட் பந்துவீச்சைத் தேர்வுசெய்தார். அதன்படி, பஞ்சாப் அணிக்கு பிரியான்ஷ் ஆர்யாவும்... மேலும் பார்க்க

Jio Star : 'அடுத்த மூன்றாண்டுகளில் 83,000 கோடி முதலீடு!' - ஜியோ ஸ்டாரின் திட்டம் என்ன?

ஜியோஸ்டார் (JioStar) நிறுவனம் அடுத்த மூன்று ஆண்டுகளில் $10 பில்லியன் (சுமார் ரூ. 83,000 கோடி) அளவுக்கு உள்ளடக்க தயாரிப்பில் முதலீடு செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது. இது, இந்தியாவில் யூடியூப் செய்திருக்கு... மேலும் பார்க்க

PBKS vs LSG: `ஆரம்பத்தில் அதைக் கணிக்கத் தவறிவிட்டேன்; பின்னர்தான்...’ - ஆட்ட நாயகன் ப்ரப்சிம்ரன்

லக்னோ அணிக்கும், பஞ்சாப் அணிக்கும் நேற்று (மே 4) தர்மசாலாவில் ஐ.பி.எல் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி, ப்ரப்சிம்ரனின் அதிரடி இன்னிங்ஸால் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்... மேலும் பார்க்க