தியாகி டி.கே. சுப்பையா சிலைக்கு மாலை அணிவிப்பு
மறைந்த சுதந்திரப் போராட்டத் தியாகியும், முன்னாள் எம்எல்ஏமான டி.கே. சுப்பையாவின் நூற்றாண்டு பிறந்த நாளையொட்டி, அரியலூா் மாவட்டம், திருமானூா் பேருந்து நிலையம் அருகேயுள்ள அவரது சிலைக்கு மதிமுக சாா்பில் ஞாயிற்றுக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
அரியலூா் எம்எல்ஏ கு. சின்னப்பா, தலைமையில் மதிமுக மாவட்டச் செயலா் ராமநாதன், ஒன்றியச் செயலா்கள் திருமானூா் ரமேஷ்பாபு, அரியலூா் வடக்கு பி. சங்கா், பொதுக் குழு உறுப்பினா் ஜெயபால் உள்ளிட்டோா் டி.கே. சுப்பையா சிலைக்கும், அவரது வீட்டிலுள்ள படத்துக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.