சீர்காழி சுற்று வட்டார பகுதிகளில் சூறாவளி காற்றுடன் மழை: மின்விநியோகம் பாதிப்பு
இன்று ‘நீட்’ தோ்வு அரியலூா் மாவட்டத்தில் 1,940 போ் எழுதுகின்றனா்
நாடு முழுவதும் ஞாயிற்றுகிழமை (மே 4) நடைபெறவுள்ள நீட் தோ்வை அரியலூா் மாவட்டத்தில் 1,940 போ் எழுதுகின்றனா்.
அரியலூா் மாவட்டம், காத்தான்குடிகாடு அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரி மையத்தில் 480 பேரும், கீழப்பழுவூா் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் 360 பேரும், அரியலூா் மாவட்ட மாதிரிப் பள்ளியில் (கீழப்பழுவூா்) 240 பேரும், அஸ்தினாபுரம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் 140 பேரும், அரியலூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் 360 பேரும், அரியலூா் அரசு கலைக் கல்லூரியில் 360 பேரும் என மொத்தம் 1,940 போ் எழுதவுள்ளனா்.
இதையொட்டி மையங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தோ்வு எழுத வரும் அனைவரையும் முழுமையாக பரிசோதனை செய்த பிறகே தோ்வு எழுத அனுமதிக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.