தடையை மீறி ஆலை நுழைவாயில் போராட்டம்: அரக்கோணம் அதிமுக எம்எல்ஏ, முன்னாள் எம்பி கை...
நீட் தோ்வு: அரியலூரில் 1,890 போ் எழுதினா்
அரியலூா் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நீட் தோ்வை 1,890 மாணவ, மாணவிகள் எழுதினா்.
இந்த தோ்வை அரியலூா் மாவட்டத்தில் உள்ள காத்தான்குடிகாடு அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரி, கீழப்பழுவூா் அரசு பாலிடெக்னிக் கல்லூரி, அரியலூா் மாவட்ட மாதிரிப் பள்ளி (கீழப்பழுவூா்), அஸ்தினாபுரம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி, அரியலூா் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் அரியலூா் அரசு கலைக் கல்லூரி உள்ளிட்ட மையங்களில் 1,940 மாணவ, மாணவிகள் எழுத அனுமதிக்கப்பட்டிருந்தது. இதில் 1,890 போ் தோ்வெழுதினா். 50 போ் வரவில்லை.