மு.க. ஸ்டாலினின் ஆட்சிக்கு சவக்குழிக்குச் சென்ற சட்டம் - ஒழுங்கே சாட்சி! - இபிஎஸ...
சரிவுடன் வர்த்தகமாகும் பங்குச் சந்தை!
மும்பை பங்குச் சந்தை குறியீடான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி சரிவுடன் தொடங்கி வர்த்தகமாகி வருகின்றது.
வாரத்தின் முதல் நாளான நேற்று, உயர்வுடன் தொடங்கிய இந்திய பங்குச் சந்தை, வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 80,796.84 புள்ளிகளாகவும், நிஃப்டி 24,461.15 புள்ளிகளாகவும் நிறைவுபெற்றது.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 231.77 புள்ளிகள் சரிந்து 80,565.08 புள்ளியாகவும், நிஃப்டி 81.05 புள்ளிகள் சரிந்து 24,380.10 புள்ளியாகவும் வர்த்தகமாகி வருகின்றது.
சன் பார்மா, டைட்டன், டாடா மோட்டார்ஸ் மற்றும் ரிலையன்ஸ் பங்குகள் சரிவுடனும், எம் & எம், பாரதி ஏர்டெல், இந்துஸ்தான் யூனிலீவர், ஆக்சிஸ் வங்கி பங்குகள் ஏற்றத்துடனும் வர்த்தகமாகி வருகின்றது.