விரைவில் அறிமுகமாகிறது மோட்டோரோலா ஜி96!
மோட்டோரோலா நிறுவனத்தில் புதிதாக ஜி 96 என்ற ஸ்மார்ட்போன் அறிமுகமாகவுள்ளது.
இதற்கு முன்பு மோட்டோரோலா ஜி86 ஸ்மார்ட்போன் அறிமுகமான நிலையில், தற்போது ஜி வரிசையில் புதிய ஸ்மார்ட்போனை அந்நிறுவனம் அறிமுகம் செய்கிறது.
அமெரிக்காவின் சிகாகோ மாகாணத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் மோட்டோரோலா நிறுவனம் அடுத்தடுத்து புதிய தயாரிப்புகளை தனது பயனர்களுக்கு அறிமுகம் செய்து வருகிறது.
சமீபத்தில் மோட்டோரோலா ஜி86 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் சிறப்பம்சங்கள் மோட்டோரோலா பயனர்களை திருப்திப்படுத்தியுள்ள நிலையில், பட்ஜெட் விலையில் நிறைவான அம்சங்களுடன் ஜி96 ஸ்மார்ட்போனை மோட்டோரோலா அறிமுகம் செய்யவுள்ளது.
இது குறித்து தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அமெரிக்காவின் பிரபல ஸ்மார்ட்போன் பிரியரான இவான் பிளாஸ், மோட்டோரோலா நிறுவனத்தின் ஜி வரிசையில் புதிதாக ஜி96 ஸ்மார்ட்போன் இடம்பெறவுள்ளது எனப் பதிவிட்டுள்ளார்.
அவரின் இந்தப் பதிவு மோட்டோரோலா பயனர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
Haven't heard this reported yet: Motorola's got a Moto G96 in the pipeline.
— Evan Blass (@evleaks) May 4, 2025
சிறப்பம்சங்கள் எப்போது வெளியாகும்
மோட்டோரோலா ஜி96 ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள் குறித்த தரவுகள் ஏதும் இதுவரை வெளியாகாத நிலையில், ஜி வரிசையில் இடம்பெற்றுள்ளதால், கையடக்க விலையில் (பட்ஜெட்) இந்த ஸ்மார்ட்போன் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மோட்டோரோலா நிறுவனத்தின் அடிப்படை அம்சங்களுடன் மேம்படுத்தப்பட்ட கேமரா, திரை மற்றும் பேட்டரி அம்சங்களில் சிறப்பம்சங்கள் சேர்க்கப்பட்டிருக்கலாம் என்ற எதிர்பார்ப்பு பயனர்கள் மத்தியில் நிலவுகிறது.
இதையும் படிக்க | மே மாதத்தில் அறிமுகமாகும் ஸ்மார்ட்போன்கள்!