மரண மாஸ் ஓடிடி தேதி!
நடிகர் பாசில் ஜோசஃப் நடித்த மரண மாஸ் படத்தின் ஓடிடி தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குநராக அறியப்பட்ட ஃபாசில் ஜோசஃப் தற்போது மலையாள சினிமாவில் நடிகராகக் கலக்கி வருகிறார். எந்தப் படத்தில் நடித்தாலும் தன் தனித்துவமான சிரிப்பு மற்றும் உடல் மொழியால் கதையின் தரத்திற்கு மேலும் வலு சேர்த்து விடுகிறார்.
இறுதியாக இவர் நடிப்பில் வெளியான சூட்சுமதர்ஷினி, பொன்மேன் ஆகிய படங்கள் ஹிட் அடித்ததுடன் தமிழகத்திலும் அவருக்கு ரசிகர்களைப் பெற்றுக் கொடுத்துள்ளது.
அண்மையில், இயக்குநர் சிவபிரசாத் இயக்கத்தில் ஃபாசில் நடித்த மரண மாஸ் திரைப்படமும் வரவேற்பைப் பெற்று வெற்றிப்படமானது.
இந்த நிலையில், இப்படம் சோனி லைவ் ஓடிடி தளத்தில் வருகிற மே 15 ஆம் தேதி வெளியாகும் என அறிவித்துள்ளனர்.
இதையும் படிக்க: பாலிவுட் மோசமானது! நேரலையில் கண்ணீருடன் பேசிய இர்ஃபான் கான் மகன்!