செய்திகள் :

நடிகர் கவுண்டமணி மனைவி சாந்தி காலமானார் - திரையுலகம் அஞ்சலி

post image

நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி உடல்நலக் குறைவால் சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 67.

தமிழ் சினிமாவின் எவர்கிரீன் நகைச்சுவை நடிகர் என்றால் அது நடிகர் கவுண்டமணிதான். சினிமாவுக்கு வந்த நாள் முதல் இப்போது வரை இவரின் நகைச்சுவைக்கென்றே தனி ரசிகர் கூட்டம் உண்டு. கவுண்டமணி செந்தில் கூட்டணிக்கென்றே அதிக நாட்கள் ஓடிய படங்களெல்லாம் உண்டு

கவுண்டமணி மனைவியின் பெயர் சாந்தி. இவர்களது திருமணம் காதல் திருமணம்.

கவுண்டமணி

சினிமாவில் உச்சத்திலிருந்தாலும் கவுண்டமணி தன் மனைவி பிள்ளைகளைப் பொது வெளியில் பெரிதாக அறிமுகப்படுத்தியதே இல்லை. சினிமா நிகழ்ச்சிகளுக்கும் கூட்டி வந்ததில்லை.

இந்நிலையில் கவுண்டமனியின் மனைவி சாந்தி கடந்த சில தினங்களாக உடல் நலம் பாதிக்கபட்டு சிகிச்சை எடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இருந்தும் சிகிச்சை பலன் அளிக்காத நிலையில் இன்று காலை காலமானார்.

சென்னையில் தேனாம்பேட்டையில் எச்.ஐ.இ.டி கல்லூரி எதிரே அமைந்துள்ள கவுண்டமணியின் வீட்டில் தற்போது சாந்தியின் உடல் வைக்கப்பட்டுள்ளது.

சாந்தியின் உடல் அடக்கம் நாளை நடக்கவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமா நடிகர் நடிகைகள் பலரும் சாந்தியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

'அண்ணனுக்கு எல்லாமே அவுங்கதான்...' - கவுண்டமணி மனைவி மறைவுக்கு சத்யராஜ், நிழல்கள் ரவி இரங்கல்

நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி உடல்நலக் குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 67. திரைப்பிரபலங்கள் பலரும் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் சத்யராஜும், நிழல்கள் ரவியும்... மேலும் பார்க்க

`மனைவியிடம் செலவுக்கு பணம் வாங்குவது கவுண்டமணி சார் சென்டிமென்ட்.!’ - மேனேஜர் மதுரை செல்வம்

தமிழ் சினிமாவின் நகைச்சுவை சக்கரவர்த்தியான கவுண்டமணியின் மனைவி சாந்தி, உடல்நலக் குறைவால் சென்னையில் இன்று காலமானார். குடும்ப வாழ்க்கை தனி, சினிமா வாழ்க்கை தனி என்று வாழ்ந்து வரும் கவுண்டமணி அவரது மனைவ... மேலும் பார்க்க

STR 49: `அவர் இமேஜ் பாதிக்காம இருக்கணும்' - சிம்பு சொன்ன கண்டிஷன்; சந்தானம் இணைந்து இப்படித்தான்

சிலம்பரசன் டி.ஆர், சந்தானம் இணையும் STR 49 படத்தின் பூஜை, சமீபத்தில் நடந்தது. அதனைத் தொடர்ந்து எப்போது படப்பிடிப்பு தொடங்கும் என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது. இந்தப் படத்தில் சந்தானம் இணைந்திரு... மேலும் பார்க்க

Tourist Family: 'இந்தப் படம் என் மனதை மிகவும் ஈர்த்தது...' - நெகிழ்ந்த அமைச்சர் மா.சுப்ரமணியன்

அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில், நடிகர் சசிகுமார், நடிகை சிம்ரன், மிதுன் ஜெய் சங்கர், கமலேஷ், யோகி பாபு, எம்.எஸ்.பாஸ்கர், ரமேஷ் திலக், பகவதி பெருமாள், இளங்கோ குமாரவேல், ஸ்ரீஜா ரவி எனப் பல... மேலும் பார்க்க