செய்திகள் :

Tourist Family: 'இந்தப் படம் என் மனதை மிகவும் ஈர்த்தது...' - நெகிழ்ந்த அமைச்சர் மா.சுப்ரமணியன்

post image

அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில், நடிகர் சசிகுமார், நடிகை சிம்ரன், மிதுன் ஜெய் சங்கர், கமலேஷ், யோகி பாபு, எம்.எஸ்.பாஸ்கர், ரமேஷ் திலக், பகவதி பெருமாள், இளங்கோ குமாரவேல், ஸ்ரீஜா ரவி எனப் பலர் நடித்திருக்கும் படம் `டூரிஸ்ட் ஃபேமிலி'.

'குட் நைட்', 'லவ்வர்' படங்களைத் தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. அரவிந்த் விஸ்வநாதன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார்.

டூரிஸ்ட் ஃபேமிலி
டூரிஸ்ட் ஃபேமிலி

இந்தப் படம் நேற்று (மே 1) திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தைப் பார்த்த திரைப்பிரபலங்கள் பலரும் படக்குழுவினரைப் பாராட்டி வருகின்றனர்.

அந்தவகையில் அமைச்சர் மா. சுப்ரமணியன் 'டூரிஸ்ட் ஃபேமிலி' படக்குழுவினரைப் பாராட்டி பதிவிட்டிருக்கிறார்.

டூரிஸ்ட் ஃபேமிலி (Tourist Family) என்ற படம் என் மனதை மிகவும் ஈர்த்தது. அக்கம் பக்கத்திலே இருப்பவரோடு மனிதாபிமான உறவோடும் பேரன்போடும் வாழும் வாழ்க்கையை போதிக்கிறது இப்படம்.

படத்தின் நாயகன் சசிகுமார் பேரன்பும், இரக்கமும்,உதவும் குணமும் உள்ளவராய் நடித்துள்ளார். இல்லை... இல்லை வாழ்ந்தே காட்டியுள்ளார். நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம் என்பதைக்காட்டும் அற்புதமான படம்.

டூரிஸ்ட் ஃபேமிலி படத்தில்...

நேரம் கிடைக்கும் போதெல்லாம் தியேட்டர்களில் படம் பார்க்கும் இயல்புடைய நான் இன்று மதியம் குடும்பத்தினருடன் சென்று படம் பார்த்தேன். படம் முடிந்து வெளிவந்தவுடன் நடிகர் சசிகுமார் அவர்களிடமும், இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் அவர்களிடமும் அலைபேசியின் வாயிலாக என்னுடைய மகிழ்ச்சியையும் பாராட்டுக்களையும் பரிமாறிக்கொண்டேன்" என்று நெகிழ்ச்சியாகப் பதிவிட்டிருக்கிறார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

Rajini: ``ஒரு இரவுக்கு 20,000 ரூபாயா? டிக்கெட்டையே கேன்சல் பண்ணிட்டாரு" - ரஜினி குறித்து அனிருத்

இசையமைப்பாளர் அனிருத் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் தன்னுடைய திரைத்துறை அனுபவம் பற்றியும் இசையமைப்புப் பணிகள் பற்றியும் பேசியிருக்கிறார். அதில், நடிகர் ரஜினிகாந்த் குறித்து சுவாரஸ்யமான தகவல் ஒன்றையும் ... மேலும் பார்க்க

Mumbai: 'உசுரே நீதானே...' ஏ.ஆர். ரஹ்மான் இசை நிகழ்ச்சியில் பாடிய தனுஷ்- வைரலாகும் வீடியோ

இந்தியா மட்டுமின்றி உலகம் முழுக்க தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை வைத்திருப்பவா் ஏ.ஆா். ரஹ்மான். படங்களுக்கு இசையமைப்பதோடு மட்டுமின்றி பல்வேறு நாடுகளுக்குச் சென்று இசை நிகழ்ச்சியை நடத்தி வருகிறார்.அந்தவக... மேலும் பார்க்க

நடிகை பெருமாயி காலமானார்.. `விஜய், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்தவர்'

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே அன்னம்பாரிபட்டியைச் சேர்ந்தவர் பெருமாயி. 73 வயதான இவர் இயக்குநர் பாரதிராஜாவின் ‘தெற்கத்தி பொண்ணு’ சீரியல் மூலம் பிரபலமாகி, பாரதிராஜாவின் பல்வேறு படங்களிலும் நடித்திருக... மேலும் பார்க்க

Retro: "Kanimaa பாடல் 15 நிமிட சிங்கிள் ஷாட் உருவான பின்னணி?" - நடன இயக்குநர் ஷெரிஃப் பேட்டி

‘கனிமா’ பாடல்தான் தற்போது ஒட்டு மொத்த மாவட்டங்களிலும் அதிரடி காட்டிக் கொண்டிருக்கிறது. ‘ரெட்ரோ’ படம் வெளியாவதற்கு முன்பே இந்தப் பாடல் சென்சேஷனல் ஹிட் அடித்திருந்தது. தற்போது படம் வெளியானதும் அதன் காட்... மேலும் பார்க்க

STR: "முதலில் ஒரு டைரக்டர் நேரத்திற்கு படப்பிடிப்பு தளத்திற்கு வரவேண்டும்" - சிம்பு ஓப்பன் டாக்

‘நாயகன்’ படத்திற்குப் பிறகு கமலும் மணி ரத்னமும் இணைந்திருக்கும் திரைப்படம் ‘தக் லைப்’. சிம்பு, த்ரிஷா, அசோக் செல்வன், அபிராமி, ஐஸ்வர்யா லக்ஷ்மி, ஜோஜு ஜார்ஜ் ஆகியோரும் படத்தின் முன்னணி கதாபாத்திரங்களில... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதல் உள்நாட்டு சதி; பாகிஸ்தான் மேல பழியைப் போட்டு.. - காஷ்மீரிலிருந்து மன்சூர் அலிகான்

சுற்றுலா சென்ற 26 பேரை சுட்டு படுகொலை செய்த பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.குறிப்பிட்ட மதத்தினர் இந்தத் தாக்குதலில் டார்கெட் செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்த... மேலும் பார்க்க