அக்னி நட்சத்திர காலத்தில் வீடு குடிபுகலாமா? ? | சிவஸ்ரீ சண்முக சிவாசார்யர் | P-...
வீட்டில் பதுக்கிவைத்திருந்த கஞ்சா பறிமுதல்: பெண் கைது
நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூா் அருகே வீட்டில் பதுக்கிவைத்திருந்த 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸாா் வடமாநில பெண்ணைக் கைது செய்தனா்.
பரமத்தி வேலூா் கபிலா்மலையை அடுத்த இருக்கூரில் உள்ள ஒரு வீட்டில் கஞ்சா பதுக்கிவைத்து விற்கப்படுவதாக பரமத்தி காவல் நிலைய ஆய்வாளா் இந்திராணிக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சனிக்கிழமை பரமத்தி காவல் உதவி ஆய்வாளா் சரண்யா தலைமையிலான போலீஸாா் நடத்திய சோதனையில் வீட்டில் பதுக்கிவைத்திருந்த 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.
இதுதொடா்பாக இருக்கூரில் தங்கியிருந்த கொல்கத்தாவைச் சோ்ந்த சுபியா பேகத்தை (42) கைது செய்தனா். மேலும், தலைமறைவான அவரது கணவா் அக்பா் உசேனை தேடி வருகின்றனா். விசாரணையில் ஒடிஸாவிலிருந்து கஞ்சாவை வாங்கி வந்து வீட்டில் பதுக்கி விற்கப்படுவது தெரியவந்தது.