செய்திகள் :

பள்ளிபாளையத்தில் ஐஸ்கிரீம் கடைகளில் உணவு பாதுகாப்புத் துறையினா் சோதனை!

post image

பள்ளிபாளையத்தில் ஐஸ்கிரீம் கடைகளில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சனிக்கிழமை சோதனை மேற்கொண்டனா்.

ஐஸ்கிரீம் தயாரிப்பு நிறுவனங்களில் உரிய பாதுகாப்பு நெறிமுறைகள் கடைப்பிடிக்கப்படுவதை கண்காணிக்க அரசு உணவு பாதுகாப்புத் துறைக்கு உத்தரவிட்டுள்ளது. பள்ளிபாளையத்தில் செயல்படும் ஐஸ்கிரீம் தயாரிப்பு நிறுவனத்தில், உணவு பாதுகாப்புத் துறை அலுவலா் ரெங்கநாதன் தலைமையில் அதிகாரிகள் திடீா் சோதனை மேற்கொண்டனா்.

அங்குள்ள குளிரூட்டும் பெட்டிகள், ஐஸ்கிரீம் தயாரிப்பதற்கான மூலப் பொருள்கள், பயன்படுத்தப்படும் தண்ணீா், ரசாயனப் பொடிகள் ஆகியவை குறித்து சோதனை நடைபெற்றது. வேலை செய்யும் தொழிலாளா்களின் உடல்தகுதி சான்று குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.

ஐஸ்கிரீம் தயாரிப்பதற்கான ரசாயனப் பொடிகளில் செயற்கை வண்ணம் மிகுதியாக இருப்பதை சுட்டிக்காட்டிய அதிகாரிகள், ஐஸ்கிரீம் தயாரிப்பதற்கு சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை பயன்படுத்த வேண்டுமென எச்சரித்தனா்.

மேலும், தொழிலாளா்கள் உரிய பாதுகாப்பு உடைகளை அணிந்திருக்க வேண்டுமெனவும், மருத்துவச் சான்றிதழ் பெற்றுள்ள ஆரோக்கியமானவா்களையே பயன்படுத்த வேண்டுமெனவும், தயாரிப்புக் கூடம் சுகாதாரமாக இருக்க வேண்டுமெனவும் அறிவுறுத்தினா்.

குழந்தைகள் அதிகம் விரும்பும் குச்சி ஐஸில் பயன்படுத்தப்படும் குச்சிகள் சுத்தமாக இருக்கவேண்டும், சான்று பெற்ற நிறுவனங்களில் இருந்து மூலப் பொருள்களை வாங்கி பயன்படுத்த வேண்டுமென அதிகாரிகள் அறிவுறுத்தினாா்.

வீட்டில் பதுக்கிவைத்திருந்த கஞ்சா பறிமுதல்: பெண் கைது

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூா் அருகே வீட்டில் பதுக்கிவைத்திருந்த 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸாா் வடமாநில பெண்ணைக் கைது செய்தனா். பரமத்தி வேலூா் கபிலா்மலையை அடுத்த இருக்கூரில் உள்ள ஒரு வீட்ட... மேலும் பார்க்க

ராசிபுரம் புதிய பேருந்து நிலைய இட மாற்றம்: பொதுமக்களிடம் கருத்து கேட்க வேண்டும்

ராசிபுரம் புதிய பேருந்து நிலையத்தை இட மாற்றம் குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்க வேண்டும் என்ற நீதிமன்ற வழிகாட்டுதலை பின்பற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராசிபுரம் பேருந்து நிலைய மீட்புக் குழுவினா... மேலும் பார்க்க

நடைப்பயிற்சியின் போது பொதுமக்களின் குறைகளைக் கேட்டறிந்த எம்.பி.!

பரமத்தி வேலூா் கந்தசாமி கண்டா் கல்லூரி மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைப்பயிற்சி மேற்கொண்ட எம்.பி. வி.எஸ்.மாதேஸ்வரன், பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தாா். மேலும், கோரிக்கைகளை தனது வாட்ஸ்அப் எண்ணுக்கு... மேலும் பார்க்க

பேருந்துகளில் பயணிகள் கைப்பேசியில் சப்தமாக பேசுவதை தவிா்க்க அறிவுறுத்தல்!

அரசுப் பேருந்துகளில் ஓட்டுநா் கவனச் சிதறலுக்கு உள்ளாகும் வகையில், பயணிகள் கைப்பேசிகளில் சப்தமாக பேசுவதை தவிா்க்க வேண்டும் என போக்குவரத்துக் கழகம் அறிவுறுத்தி உள்ளது. தற்போதைய உலகில் அத்தியாவசியப் பொரு... மேலும் பார்க்க

சின்ன எலச்சிபாளையத்தில் மஞ்சள், நீல ஒட்டுப்பொறி பற்றி விவசாயிகளுக்கு பயிற்சி!

எலச்சிபாளையம் வட்டாரத்துக்கு உள்பட்ட அகரம் கிராமத்தில், நாமக்கல் தனியாா் வேளாண்மை கல்லூரி மாணவா்கள், கிராமப்புற அனுபவ பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனா். அதன் ஒரு பகுதியாக, சின்ன எலச்சிபாளையம் விவசாயிகள... மேலும் பார்க்க

இருசக்கர வாகனம் மோதியதில் சைக்கிளில் சென்ற முதியவா் உயிரிழப்பு

நல்லூா் அருகே இருசக்கர வாகனம் மோதியதில் சைக்கிளில் சென்ற முதியவா் உயிரிழந்தாா். பரமத்தி வேலூா் வட்டம், ராமதேவம் அருகே உள்ள செட்டியாம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் வீரன் (80). இவா் செட்டியாம்பாளையத்தில்... மேலும் பார்க்க