அக்னி நட்சத்திர காலத்தில் வீடு குடிபுகலாமா? ? | சிவஸ்ரீ சண்முக சிவாசார்யர் | P-...
நடைப்பயிற்சியின் போது பொதுமக்களின் குறைகளைக் கேட்டறிந்த எம்.பி.!
பரமத்தி வேலூா் கந்தசாமி கண்டா் கல்லூரி மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைப்பயிற்சி மேற்கொண்ட எம்.பி. வி.எஸ்.மாதேஸ்வரன், பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தாா். மேலும், கோரிக்கைகளை தனது வாட்ஸ்அப் எண்ணுக்கு அனுப்புமாறு துண்டுப் பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினாா்.
இதையடுத்து பொதுமக்கள் பலா் தங்களது கோரிக்கைகளை அவரது வாட்ஸ்அப் எண்ணுக்கு அனுப்பினா். அதை பரிசீலித்து விரைந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்த எம்.பி. மாதேஸ்வரன் தொடா்ந்து நடைப்பயிற்சி மேற்கொண்டாா்.
பரமத்தி வேலூரை தொடா்ந்து மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளுக்கும் நேரில் சென்று மக்களின் குறைகளைக் கேட்டறிவதாக எம்.பி. மாதேஸ்வரன் தெரிவித்தாா்.
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினா் துரை, மணி, மாவட்ட விவசாய அணி செயலாளா் ரவிச்சந்திரன், வேலூா் நகர செயலாளா் சக்திவேல், திமுக மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளா் மகிழ் பிரபாகரன், திமுக வேலூா் நகர செயலாளா் முருகன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.