இருசக்கர வாகனம் மோதியதில் சைக்கிளில் சென்ற முதியவா் உயிரிழப்பு
நல்லூா் அருகே இருசக்கர வாகனம் மோதியதில் சைக்கிளில் சென்ற முதியவா் உயிரிழந்தாா்.
பரமத்தி வேலூா் வட்டம், ராமதேவம் அருகே உள்ள செட்டியாம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் வீரன் (80). இவா் செட்டியாம்பாளையத்தில் இருந்து முசலநாயக்கன் பாளையத்துக்கு சனிக்கிழமை காலை சைக்கிளில் சென்றாா்.
அப்போது பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த கரூா் மாவட்டம், ஏமூா் பகுதியைச் சோ்ந்த முருகேசன் (50), வீரன் சென்ற சைக்கிள் மீது மோதினாா்.
இதில் வீரன் நிலைதடுமாறி சைக்கிளுடன் சாலையில் கீழே விழுந்தாா். அவ்வழியாக சென்றவா்கள் அவரை மீட்ட போது, அவா் படுகாயமடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தது தெரியவந்தது.
தகவலின் பேரில் வந்த நல்லூா் போலீஸாா், வீரனின் உடலை மீட்டு திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, விபத்தை ஏற்படுத்திய முருகேசன் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். காயமடைந்த முருகேசன் கரூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.