மாற்றி யோசித்த பெற்றோர்.. 10-ஆம் வகுப்பில் தோல்வி.. கேக் வெட்டிக் கொண்டாட்டம்
பொறியியல் படிப்புகளுக்கு மே 7 முதல் விண்ணப்பிக்கலாம்!
தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கு மே 7 ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் 2024-25 கல்வியாண்டுக்கான பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 9 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகளில் இளநிலைப் படிப்புகளில் சேர மே 7 ஆம் தேதி முதல் https://www.tneaonline.org/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, பொறியியல் விண்ணப்பப் பதிவு மே 7 தொடங்கி ஜூன் 6 வரை நடைபெற உள்ளது.
அதன்பின்னர் கலந்தாய்வு தேதிகள் அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.
பொறியியல் கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்பப் பதிவினை அமைச்சர் கோவி.செழியன் நாளை(மே 6) தொடங்கிவைக்க உள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.