வீட்டுமனைப் பட்டா கோரி புதுவை பேரவையை முற்றுகையிட்ட பட்டியலின மக்கள்
தஞ்சையில் மே 7ல் உள்ளூர் விடுமுறை!
தஞ்சைப் பெரிய கோயிலில் சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நடைபெறுவதால் மே 7-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
உலகப் புகழ்பெற்ற தஞ்சைப் பெரிய கோயிலில் சித்திரைத் திருவிழா நடைபெற்று வருகின்றது. முக்கிய நிகழ்வான தேரோட்டம் வருகிற மே 7ஆம் தேதி நடைபெற உள்ளது.
அதனை முன்னிட்டு அன்று தஞ்சை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் மே 24-ஆம் தேதி அலுவலகங்கள் செயல்படும் எனவும் அறிவித்துள்ளார்.