கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?
ஸ்ரீரங்கத்தில் கோடை திருநாள் விழா தொடக்கம்
ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் கோடைத் திருநாள் எனும் பூச்சாற்று உற்சவ விழா வெள்ளிக்கிழமை தொடங்கியது.
சித்திரை மாதத்தில் இந்த விழா வெளிக் கோடைத் திருநாள், உள்கோடை திருநாள் என தலா 5 நாள் நடைபெறுகிறது. இதில் வெளிக்கோடைத் திருநாளின் முதல் நாளான வெள்ளிக்கிழமை மாலை நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு வெளிக்கோடை நாலுகால் மண்டபத்துக்கு இரவு 7 மணிக்கு வந்தாா்.
தொடா்ந்து நம்பெருமாளுக்கு புஷ்பம் சாத்துப்படி நடைபெற்றது. ஏராளமான பக்தா்கள் தரிசனம் செய்தனா். பின்னா் 8.30 மணிக்குப் புறப்பட்டு 9 மணிக்கு மூலஸ்தானம் சென்று சோ்ந்தாா் நம்பெருமாள்.
வெளிக்கோடை திருநாளின் 4 ஆம் நாளான வரும் 5 ஆம் தேதி வரை மேற்குறிப்பிட்ட நேரங்களில் வெளிக்கோடை மண்டபத்தில் நம்பெருமாள் எழுந்தருளுகிறாா். விழாவின் 5 ஆம் நாளான வரும் 6 ஆம் தேதி ஸ்ரீராம நவமியையொட்டி அா்ச்சுன மண்டபத்தில் சேரகுல வல்லித் தாயாருடன் நம்பெருமாள் சோ்த்தி சேவையில் காட்சி தருகிறாா்.
தொடா்ந்து உள்கோடைத் திருநாள் 7 ஆம் தேதி தொடங்கி 11 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையா் செ.சிவராம்குமாா் மற்றும் கோயில் பணியாளா்கள் செய்கின்றனா்.