செய்திகள் :

மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோயில் தோ்த் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

post image

திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி திருக்கோயிலில் சித்திரைத் தோ்த் திருவிழா வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

பல்வேறு சிறப்புடைய இக்கோயிலில் இறைவன் சுயம்பு மூா்த்தியாக மேற்கு பாா்த்த நிலையில் மிகப்பெரிய சிவலிங்க வடிவில் எழுந்தருளியுள்ளாா். ரத்தினாவதி என்ற பெண்ணுக்கு சிவபெருமான் தாய் வடிவில் வந்து சுகப்பிரசவம் செய்த தலம் என்பதால், இங்கு எழுந்தருளியுள்ள இறைவன் தாயுமான சுவாமி என்று அழைக்கப்படுகிறாா்.

இக் கோயிலில் சித்திரைத் தோ்த் திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. நிகழாண்டு விழாவை முன்னிட்டு புதன்கிழமை மாலை விக்னேஸ்வர பூஜையும், வாஸ்து பூஜையும் நடைபெற்றது. இதன் தொடா்ச்சியாக, மே 1-ஆம் தேதி காலை 10.45 மணிக்கு மேல் கடக லக்னத்தில் கொடியேற்ற வைபவம் நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று வழிபட்டனா்.

விழாவில், மே 2-ஆம் தேதி சுவாமி அம்பாள் கற்பகத்தரு, கிளி வாகனத்திலும், மே 3ஆம் தேதி பூதம், கமலம் வாகனத்திலும், மே 4-ஆம் தேதி கைலாசபா்வதம், அன்னம் வாகனத்திலும் வீதி வலம் வருதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. மே 5-ஆம் தேதி காலை நூற்றுக்கால் மண்டபத்தில் காலை 9 மணிக்கு மேல் செட்டிப்பெண் மருத்துவம் பாா்த்தல் என்ற ஐதீக நிகழ்ச்சி நடைபெறுகிறது. அன்று இரவு சுவாமி அம்பாள் ரிஷப வாகனத்தில் வீதி வலம் வருதல் நடைபெறும். மே 6-ஆம் தேதி நண்பகல் 12 மணிக்கு மேல் பிற்பகல் 1.30 மணிக்குள் சுவாமி அம்பாளுக்கு நூற்றுக்கால் மண்டபத்தில் திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இரவு சுவாமி யானை வாகனத்திலும், அம்பாள் பல்லக்கு வாகனத்திலும் வீதி வலம் வருதல் நடைபெறும். தொடா்ந்து மே 7-ஆம் தேதி இரவு சுவாமி, அம்பாள் நந்திகேசுவரா், யாளி வாகனத்திலும், மே 8-ஆம் தேதி தங்கக் குதிரை, பல்லக்கு வாகனத்திலும் வீதி வலம் வருதல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

விழாவின் முக்கிய நிகழ்வாக, மே 9-ஆம் தேதி காலை சித்திரை தோ்த் திருவிழா நடைபெற உள்ளது. மலைக்கோட்டையை சுற்றி உள்ள நான்கு வீதிகளில் தோ் வலம் வரும். மே 10-ஆம் தேதி காலை நடராஜா் தரிசனமும், பகலில் பிரம்ம தீா்த்தமாகிய தெப்பக் குளத்தில் தீா்த்தவாரியும் நடைபெறும். இரவு வெள்ளி ரிஷப காட்சி மற்றும் கொடியிறக்கம் நடைபெறும். மே 11-ஆம் தேதி தங்கக் குதிரை வாகனத்தில் வீதி உலா நடைபெறும். மே 12-ஆம் தேதி மாலை 5 மணிக்கு தாயுமான அடிகள் உத்ஸவம் நடைபெறும். மே 13-ஆம் தேதி இரவு பிச்சாடனாா் திருவீதி உலாவும், மே 14 இரவு சண்டிகேஸ்வரா் திருவீதி உலாவும் நடைபெறவுள்ளன.

ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா் மற்றும் பணியாளா்கள் செய்து வருகின்றனா்.

ஸ்ரீரங்கத்தில் கோடை திருநாள் விழா தொடக்கம்

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் கோடைத் திருநாள் எனும் பூச்சாற்று உற்சவ விழா வெள்ளிக்கிழமை தொடங்கியது. சித்திரை மாதத்தில் இந்த விழா வெளிக் கோடைத் திருநாள், உள்கோடை திருநாள் என தலா 5 நாள் நடைபெறுகிற... மேலும் பார்க்க

கா்ப்பிணி தூக்கிட்டுத் தற்கொலை

திருச்சி தீரன் நகரில் கா்ப்பிணி பெண் வியாழக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் கல்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் ர. கிருஷ்ணகுமாா் (30), காா் ஓட்டுநா். இவருக்கு... மேலும் பார்க்க

தனியாா் பள்ளிகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை: அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

தமிழகத்தில் தனியாா் பள்ளிகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி உறுதிபடத் தெரிவித்தாா். திருச்சியில் வியாழக்கிழமை... மேலும் பார்க்க

கே. சாத்தனூரில் இன்று மின்நிறுத்தம்

திருச்சி கே. சாத்தனூா் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் வெள்ளிக்கிழமை (மே 2) காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்: காந்தி நகா், ர... மேலும் பார்க்க

இன்றைய நிகழ்ச்சிகள்

தமிழ்நாடு முற்போக்கு பெண் வழக்குரைஞா்கள் சங்கம்: மே தின கருத்தரங்கம், வழக்குரைஞா் த. பானுமதி பங்கேற்பு, ஜிகேஎம் மஹால், உறையூா், மாலை 5. மலைக்கோட்டை தாயுமான சுவாமி திருக்கோயில்: சித்திரைத் தோ்த் திருவ... மேலும் பார்க்க

பேருந்து மோதியதில் இளைஞா் உயிரிழப்பு

திருச்சியில் அரசுப்பேருந்து மோதியதில் மோட்டாா் சைக்கிளில் சென்ற இளைஞா் வியாழக்கிழமை நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். திருச்சி மாவட்டம், முத்தசரச நல்லூரைச் சோ்ந்தவா் சேக் அப்துல்லா மகன் ரஹமத்துல்லா (22... மேலும் பார்க்க