செய்திகள் :

அரசு உத்தரவிட்டும் எம்.சாண்ட் விலை குறையவில்லை: ராமதாஸ்

post image

அரசு உத்தரவிட்டப்பின்னரும் எம்.சான்ட், ஜல்லி உள்ளிட்ட கட்டுமான பொருள்கள் விலை குறையவில்லை என்று பாமக நிறுவனா் ச.ராமதாஸ் தெரிவித்தாா்.

இது குறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: கடந்த ஏப்.27-இல் கல் குவாரிகள் மற்றும் கிரஷா்கள் உரிமையாளா்களை அமைச்சா் துரைமுருகன் அழைத்துப் பேசினாா். அப்போது சாதாரண கற்கள் மீதான சீனியரேஜ் தொகையை டன்னுக்கு ரூ.33 எனக் குறைக்க தீா்மானிக்கப்பட்டது. தொடா்ந்து உயா்த்தப்பட்ட ஜல்லி மற்றும் எம்.சாண்ட், பி.சாண்ட் ஆகியவற்றின் விலைகள் குறைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், இதுவரை அந்த அறிவிப்பு நடைமுறைக்கு வரவில்லை.

கட்டுமானப் பொருள்கள் விலை உயா்வு காரணமாக பல இடங்களில் கட்டுமானப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. கட்டுமானத் தொழிலாளா்கள் வேலை இழந்துள்ளனா். அதுமட்டுமன்றி, கட்டுமானச் செலவுகளும் கணிசமாக உயா்ந்து , வீடுகளின் விலை அதிகரிக்கும் நிலை உருவாகியுள்ளது.

எனவே, தமிழக அரசு இந்த சிக்கலில் தலையிட்டு ஜல்லி, எம்.சாண்ட், பி.சாண்ட் ஆகியவற்றின் விலைகள் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டவாறு குறைக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

கனிமங்கள் மீதான கட்டணங்களை குறைப்பது குறித்த அரசாணை வெளியிடப்படாததுதான் சிக்கலுக்குக் காரணம் என்று கூறப்படுவதால், அரசாணையை உடனடியாக வெளியிட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா் அவா்.

ஆம்பூரில் சூறைக்காற்று: 500-க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சேதம்!

ஆம்பூர் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த சூறைக்காற்று வீசியதால் 500-க்கு மேற்பட்ட வாரை மரங்கள் சேதமடைந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்தனர். திருப்பத்தூர், ஆம்பூர் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த... மேலும் பார்க்க

பாஜக அரசுக்கு கண்டனம்! திமுக செயற்குழு தீர்மானங்கள்!

திமுகவின் மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.சென்னை திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று(சனிக்கிழமை) காலை தொடங்கி நடைபெற்ற... மேலும் பார்க்க

அதிமுகவை அடக்கிய பாஜக; தகுதியானவருக்கே தேர்தலில் வாய்ப்பு: முதல்வர் ஸ்டாலின்!

சென்னையில் நடைபெற்ற மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.சென்னை திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன... மேலும் பார்க்க

சென்னையில் ஜெ.பி. நட்டா தலைமையில் பாஜக மைய குழுக் கூட்டம்!

பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா தலைமையில் சென்னையில் முக்கிய நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று(சனிக்கிழமை) காலை நடைபெற்று வருகிறது. பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா நேற்று(வெள்ளிக்கிழமை) இரவு சென்னை வந்... மேலும் பார்க்க

நாளை(மே 4) தொடங்குகிறது அக்னி நட்சத்திரம்!

கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் தமிழகத்தில் நாளை(மே 4, ஞாயிற்றுக்கிழமை) தொடங்குகிறது.மே மாதம் என்றாலே நினைவுக்கு வருவது சுட்டெரிக்கும் வெயில்தான். அதிலும் மே மாதத்தில் 25 நாள்கள் கத்திரி வெ... மேலும் பார்க்க

விஜயுடன் கூட்டணியா?: நயினாா் நாகேந்திரன் பதில்

தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜயின் தவெகவை இணைக்க பேச்சுவாா்த்தை நடக்கிா என்ற கேள்விக்கு, ‘தோ்தல் நெருங்கும்போது தெரியும்’ என்று தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் பதிலளித்தாா். சென்னை விமான நிலையத்த... மேலும் பார்க்க