திருக்கழுகுன்றம் வேதகிரீஸ்வரா் கோயில் பிரம்மோற்சவம்: 63 நாயன்மாா்கள் வீதியுலா
பாஜக அரசுக்கு கண்டனம்! திமுக செயற்குழு தீர்மானங்கள்!
திமுகவின் மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
சென்னை திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று(சனிக்கிழமை) காலை தொடங்கி நடைபெற்றது.
திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதுடன், கட்சியின் வளர்ச்சிப் பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
செயலாளர் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் மற்றும் மறைந்த முன்னாள் கத்தோலிக்க திருச்சபை தலைவர் போப் பிரான்சிஸுக்கு இரங்கல் தெரிவிக்கப்படுகிறது.
நாட்டின் முதல்வர்களில் முன்னோடியாக விளங்கும் தமிழக முதல்வருக்கு பாராட்டு
திமுக அரசின் நான்காண்டு சாதனைகளை விளக்கும் பொதுக்கூட்டங்கள் நடத்தப்படும்.
மதுரை மாநகரில் பொதுக்குழுக் கூட்டம் நடத்தப்படும்.
அமலாக்கத் துறையை அரசியல் பழிவாங்கலுக்கு பயன்படுத்தும் பாஜக அரசுக்கு கண்டனம்
இதையும் படிக்க:அதிமுகவை அடக்கிய பாஜக; தகுதியானவருக்கே தேர்தலில் வாய்ப்பு: முதல்வர் ஸ்டாலின்!