நாகர்கோவில் - சென்னை வந்தே பாரத் ரயில் இன்று தாமதமாகப் புறப்படும்!
நாகர்கோவிலில் இருந்து சென்னை வரும் வந்தே பாரத் ரயில் இன்று 3 மணி நேரம் காலதாமதமாகப் புறப்படும் என தெற்கு ரயில்வே தகவல் தெரிவித்துள்ளது.
நாகர்கோவிலில் இருந்து இன்று(மே 3) பிற்பகல் 2.20 மணிக்குப் புறப்பட வேண்டிய வந்தே பாரத் ரயில், 3 மணி நேரம் தாமதமாக மாலை 5.20 மணிக்குப் புறப்படும், இணைப்பு ரயில் காலதாமதமாக வருவதால் இன்று தாமதமாகப் புறப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல கன்னியாகுமரி - திப்ரூகர்க் விவேக் எக்ஸ்பிரஸ், கன்னியாகுமரியில் இருந்து மாலை 5.25 மணிக்குப் புறப்பட வேண்டிய நிலையில் 3 மணி நேரம் தாமதமாகஇரவு 8.25 மணிக்குப் புறப்படும் என்று தெற்கு ரயில்வே தகவல் தெரிவித்துள்ளது.
Update: Train Departures Delayed by 3hrs(03.05.2025)
— Southern Railway (@GMSRailway) May 3, 2025
Departures from Nagercoil & Kanniyakumari are delayed due to inbound train delays.
Kindly please check revised timings before travel.#SouthernRailwaypic.twitter.com/RxVShF6mTc
இதையும் படிக்க | அதிமுகவை அடக்கிய பாஜக; தகுதியானவருக்கே தேர்தலில் வாய்ப்பு: முதல்வர் ஸ்டாலின்!