செய்திகள் :

ரூ.68,200 சம்பளத்தில் ரசாயன ஆய்வகத்தில் வேலை: பிளஸ் 2 முடித்தவர்களுக்கு வாய்ப்பு!

post image

இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ஒரு தன்னாட்சி அமைப்பான அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலின் (சிஎஸ்ஐஆர்) கீழ் புணேயில் செயல்பட்டு வரும் தேசிய ரசாயன ஆய்வகத்தில் காலியாக உள்ள இளநிலை செயலக உதவியாளர் பணியிடங்களுக்கு பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து வரும் 5 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண். NCL/01-2025/ADMIN-JSA

பணி: Junior Secretariat Assistant

பிரிவு: General

காலியிடங்கள்: 11

பிரிவு: Stores & Purchase

காலியிடங்கள்: 4

பிரிவு: Finance & Accounts

காலியிடங்கள்: 3

சம்பளம்: மாதம் ரூ.19,900 - 68,200

தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் கணினியில் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 5.5.2025 தேதியின்படி 28 வயதிற்குள் இருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் சலுகை வழங்கப்படும்.

ரூ.40,000 சம்பளத்தில் இர்கான் நிறுவனத்தில் வேலை: உடனே விண்ணப்பிக்கவும்!

தேர்வு செய்யப்படும் முறை: கணினியில் தட்டச்சு தேர்வு மற்றும் சான்றிதழ்கள் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி, முன்னாள் ராணுவத்தினர் பிரிவைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர்களுக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:https://recruit.ncl.res.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 5.5.2025

மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

மத்திய அரசின் 'ஏ' நிறுவன பட்டியலில் இடம்பெற்றுள்ள முதன்மையான மினிரத்னா நிறுவனமான கொச்சின் கப்பல் கட்டும் தளத்தில் காலியாக உள்ள கிரேன் ஆப்ரேட்டர் மற்றும் ஓட்டுநர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இரு... மேலும் பார்க்க

மிஸ்பண்ணிடாதீங்க... இந்திய விமான நிலைய ஆணையத்தில் வேலை!

RECRUITMENT OF JUNIOR EXECUTIVES (AIR TRAFFIC CONTROL) IN AIRPORTS AUTHORITY OF INDIAமிஸ்பண்ணிடாதீங்க... இந்திய விமான நிலைய ஆணையத்தில் வேலை!மத்திய அரசு நிறுவனமான இந்திய விமான நிலைய ஆணையத்தில்(ஏர்போர்... மேலும் பார்க்க

ரூ.40,000 சம்பளத்தில் இர்கான் நிறுவனத்தில் வேலை: உடனே விண்ணப்பிக்கவும்!

இந்திய ரயில்வே அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் நவரத்னா பொதுத்துறை நிறுனமான இர்கான் இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனம் ரயில்வே, நெடுஞ்சாலைகள், கட்டடங்கள், மின்சாரத் துறை போன்றவற்றில் உள்கட்டமைப்பு பணி... மேலும் பார்க்க

என்எல்சி நிறுவனத்தில் வேலை: டிப்ளமோ, டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

கடலூர் மாவட்டம், நெய்வேலியில் செயல்பட்டும் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான நெய்வேலி பழுப்பு நிலக்கரி (என்எல்சி) நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 171 ஜூனியர் ஓவர்மேன், சுரங்க சர்தார் பணியிடங்களுக்கான வ... மேலும் பார்க்க

ரூ.73,750 சம்பளத்தில் கொச்சின் கப்பல் கட்டும் தளத்தில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

மத்திய அரசின் 'ஏ' நிறுவன பட்டியலில் இடம்பெற்றுள்ள முதன்மையான மினிரத்னா நிறுவனமான கொச்சின் கப்பல் கட்டும் தளத்தில் முன்னாள் ராணுவ வீரர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள கிரேன் ஆபரேட்டர், பணியாளர் கார் ஓட்டுநர்... மேலும் பார்க்க

பொதுத்துறை நிறுவனத்தில் வேலை வேண்டுமா?: உடனே விண்ணப்பிக்கவும்!

ஆண்ட்ரூ யூல் அண்ட் கம்பெனி லிமிடெட் நிறுவனமானது 1863 முதல் செயல்பட்டு வரும் பொதுத்துறை நிறுவனமாகும். இந்நிறுவனம் தேயிலைத் தோட்டங்கள், பொறியியல் மற்றும் மின் பிரிவுகள் உள்பட பல துறைகளில் செயல்பட்டு வரு... மேலும் பார்க்க