கோடை வெயிலில் கருகும் சின்னமனூர் வெற்றிலை - கவலையில் விவசாயிகள்
பொதுத்துறை நிறுவனத்தில் வேலை வேண்டுமா?: உடனே விண்ணப்பிக்கவும்!
ஆண்ட்ரூ யூல் அண்ட் கம்பெனி லிமிடெட் நிறுவனமானது 1863 முதல் செயல்பட்டு வரும் பொதுத்துறை நிறுவனமாகும். இந்நிறுவனம் தேயிலைத் தோட்டங்கள், பொறியியல் மற்றும் மின் பிரிவுகள் உள்பட பல துறைகளில் செயல்பட்டு வருகிறது. நாட்டின் பழமையான மற்றும் மதிப்புமிக்க பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றாக விளங்கும் இந்நிறுவனத்தில் கொல்கத்தா கிளையில் காலியாக உள்ள உதவி மேலாளர் போன்ற பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்.: 2024/03
பணி: Asst. Manager Gr. I
காலியிடங்கள்: 3
சம்பளம்: மாதம் ரூ.42,000
தகுதி: Material Management, Marketing, Mechanical Engineering போன்ற ஏதாவதொரு பிரிவில் டிப்ளமோ தேர்ச்சியுடன் 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 38-க்குள் இருக்க வேண்டும்.
பணி: Asst. Manager Gr. II
காலியிடங்கள்: 3
சம்பளம்: மாதம் ரூ.39,000
தகுதி : Material Management, Mechanical Engineering போன்ற ஏதாவதொரு பிரிவில் டிப்ளமோ அல்லது கலை, அறிவியல், வணிகவியல் போன்ற ஏதாவதொரு பிரிவில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 36-க்குள் இருக்க வேண்டும்.
பணி: Asst.Manager E1/E2
காலியிடங்கள் : 4
சம்பளம்: மாதம் ரூ.40,000 - 1,40,000 (E1), ரூ.50,000 - 1,60,000 (Ε2)
வயதுவரம்பு: 32-க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: Plantation Management, Engineering, Agriculture, Bio-Science போன்ற ஏதாவதொரு பிரிவில் இளங்கலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: www.andrewyule.com என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 30.4.2025
மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும்.