மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் வேலை வேண்டுமா?: உடனே விண்ணப்பிக்கவும்!
மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் காலியாகவுள்ள பல்வேறு பல்வேறு பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 28 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்: 01/2025 - Admin (R)
பணி: Scientist 'B'
காலியிடங்கள்: 22
சம்பளம்: மாதம் ரூ.56,100 - 1,77,500
தகுதி : பொறியியல் துறையில் சுற்றுச்சூழல் பொறியியல், சிவில், இன்ஸ்ட்ருமென்டேஷன், வேதியியல், இயந்திரவியல், செயற்கை நுண்ணறிவு(ஏஐ), கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பம் ஆகிய ஏதவொரு பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். நெட், முனைவர் பட்டம் பெற்றிருப்பவர்களுக்கு முன்னுரிமை அளக்கப்படும்.
வயது வரம்பு: 35-க்குள் இருக்க வேண்டும்.
பணி: Assistant Law Officer
காலியிடம்: 1
சம்பளம்: மாதம் ரூ.44,900 - 1,42,400
தகுதி : சட்டப் பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருப்பதுடன் 5 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 30-க்குள் இருக்க வேண்டும்.
பணி: Senior Technical Supervisor
காலியிடங்கள்: 2
சம்பளம்: மாதம் ரூ.44,900 - 1,42,400
தகுதி:பொறியியல் துறையில் இன்ஸ்ட்ருமென்டேஷன், மின்னணுவியல் பிரிவில் இளங்கலைப் பட்டத்துடன் 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 30-க்குள் இருக்க வேண்டும்.
பணி: Senior Scientific Assistant
காலியிடங்கள்: 4
சம்பளம்: மாதம் ரூ.35.400 - 1,12,400
தகுதி: அறிவியல் பாடப்பிரிவு ஏதாவதொன்றில் முதுகலைப்பட்டம் தேர்ச்சியுடன் 2 ஆண்டு பணி அனுபவம் பெற் றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 30-க்குள் இருக்க வேண்டும்.
பணி: Technical Supervisor
காலியிடங்கள்: 5
சம்பளம்: மாதம் ரூ.35,400 - 1,12,400
தகுதி: பொறியியல் துறையில் மெக்கானிக்கல், எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரிக்கல், இன்ஸ்ட்ருமென்டேஷன் பிரிவில் இளங்கலைப் பட்டத்துடன் 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 30-க்குள் இருக்க வேண்டும்.
பணி: Assistant
காலியிடங்கள்: 4
சம்பளம்: மாதம் ரூ.35,400 - 1,12,400
தகுதி: ஏதாவதொரு பாடப்பிரிவில் இளநிலை பட்டப் படிப்பு தேர்ச்சியுடன் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் அல்லது இந்தியில் 30 வார்த்தைகள் கணினியில் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 30-க்குள் இருக்க வேண்டும்.
பணி: Accounts Assistant
காலியிடங்கள்: 2
சம்பளம்: மாதம் ரூ.35,400 - 1,12,400
தகுதி: வணிகவியல் பிரிவில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் 3 வருட பணி அனு பவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 30-க்குள் இருக்க வேண்டும்.
பணி: Junior Translator
காலியிடம்: 1
சம்பளம்: மாதம் ரூ.35,400 - 1,12,400
தகுதி: இந்தி மற்றும் ஆங்கில பாடங்களுடன் ஏதாவ தொரு முதுநிலைப்பட்டப்படிப்பை முடித்து ஆங்கிலத்திலிருந்து இந்திக்கும், இந்தியிலிருந்து ஆங்கிலத்திற்கும் மொழிபெயர்க்க தெரிந்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: 30-க்குள் இருக்கவேண்டும்.
பணி: Senior Draughtsman
காலியிடம்: 1
சம்பளம்: மாதம் ரூ.35,400 - 1,12,400
தகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில் இளங்கலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 30-க்குள் இருக்க வேண்டும்.
பணி: Junior Technician
காலியிடம்: 2
சம்பளம்: மாதம் ரூ.25,500 - 81,100
தகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ரிக்கல் பிரிவில் இளங்கலைப் பட்டம் பெற்று ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Senior Laboratory Assistant
காலியிடங்கள்: 2
சம்பளம்: மாதம் ரூ.25,500 - 81,000
தகுதி:அறிவியல் பாடத்தில் பிளஸ் 2 தேர்ச்சியுடன் 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Upper Division Clerk
காலியிடங்கள்: 8
சம்பளம்:மாதம் ரூ.25,500 - 81,000
தகுதி: ஏதாவதொரு பாடப்பிரிவில் இளங்கலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் நிமிடத்திற்கு ஆங்கிலத்தில் 35 வார்த்தைகளும், இந்தியில் 30 வார்த்தைகளும் கணினியில் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 35-க்குள் இருக்க வேண்டும்.
பணி: Data Entry Operator
காலியிடம்: 1 (UR)
சம்பளம்: மாதம் ரூ.25,500 - 81,000
தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் ஒரு மணி நேரத்தில் 8,000 எழுத்துக்கள் கணினியில் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Stenographer
காலியிடங்கள்: 3
சம்பளம்: மாதம் ரூ.25,500 - 81,000
தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் நிமிடத்திற்கு 80 வார்த்தைகள் சுருக்கெழுத்தில் எழுதி, அதனை ஆங்கிலத்தில் 50 நிமிடத்திலும், இந்தியில் 65 நிமிடத்திலும் கணினியில் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Junior Laboratory Assistant
காலியிடங்கள்: 2
சம்பளம்: மாதம் ரூ.19,900 - 63,200
தகுதி: அறிவியல் பாடத்தில் பிளஸ் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பணி: Lower Division Clerk
காலியிடங்கள்: 5
சம்பளம்: மாதம் ரூ. 19,900 - 63,200
தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் ஆங்கிலத்தில் 35 நிமிடத்திற்கு வார்த்தைகளும், இந்தியில் 30 வார்த்தைகளும் கணினியில் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Field Attendant
காலியிடம்: 1
சம்பளம்: மாதம் ரூ.18,100 - 56,900
தகுதி : பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பணி: Multi Tasking Staff
காலியிடங்கள்: 3
சம்பளம்: மாதம் ரூ.18,000 - 56.900
தகுதி: குறைந்தது பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது எலக்ட்ரிக்கல், மெக்கானிக், பிளம்பர் பிரிவில் ஐடிஐ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
விண்ணப்பக்கட்டணம்: ரூ. 500. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி, முன்னாள் ராணுவத்தினர் மற்றும் பெண்களுக்கு விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை: www.cpcb.nic.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 28.4.2025