செய்திகள் :

`பணத்துக்காக 25 வயது மூத்த பெண்ணுடன் ரகசிய திருமணம்..' - கொலை செய்த கணவனுக்கு ஆயுள் தண்டனை!

post image

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள குன்னத்துகால் பகுதியைச் சேர்ந்த ஷாகா குமாரி, நெய்யாற்றின்கரை பகுதியில் பியூட்டி பார்லர் நடத்தி வந்தார். இவர்,52 வயது ஆகியும் திருமணம் செய்யாமல் வாழ்ந்து வந்தார்.

இந்நிலையில், எலக்ட்ரீசியன் வேலை செய்து வந்த அருண் என்பவருடன் பழக்கம் ஏற்பட்ட நிலையில், அது காதலாக மலர்ந்தது. அதியனூரைச் சேர்ந்த அருணுக்கு வயது 27.

தன்னைவிட 25 வயது அதிகமுள்ள பெண்ணை திருமணம் செய்த அருண்

2020-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 29-ம் தேதி இவர்களுக்கு திருமணம் நடைபெற்றது.

தன்னைவிட சுமார் 25 வயது அதிகமுள்ள பெண்ணாக இருந்தபோதும் பணத்துக்கு ஆசைப்பட்டு அருண் திருமணம் செய்துள்ளார் . இதனால், திருமணம் வேறு யாருக்கும் தெரியக்கூடாது என்பதற்காக தனது நெருங்கிய ஒரு நண்பனை மட்டும் அழைத்துச் சென்று எளிமையாக திருமணம் செய்திருக்கிறார் அருண்.

திருமணத்தின் போது ஷாகா குமாரியின் வீட்டார் 50 லட்சம் ரூபாயும் 100 பவுன் நகைகளும் வரதட்சணையாக கொடுத்துள்ளனர்.

அதே சமயம் திருமணத்தை ரகசியமாக வைத்துக் கொள்ள வேண்டும் என ஷாகாகுமாரியிடம் அருண் கூறியிருக்கிறார். ஆனால் ஷாகா குமாரி தனது உறவினர்களுக்கு திருமண போட்டோக்களை அனுப்பியுள்ளார். அவர்கள் சமூக வலைத்தளங்களில் திருமண போட்டோக்களை பகிர்ந்துள்ளனர்.

கொலையான ஷாகாகுமாரி ஆயுள்தண்டனை விதிக்கப்பட்ட அருண்

இதையடுத்து அருணின் பிற நண்பர்களுக்கு திருமணம் குறித்து தெரியவந்ததால் வயதுக்கு அதிகமான பெண்ணை திருமணம் செய்ததாக கிண்டல் செய்துள்ளனர்.

இதற்கிடையே அருண் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என தனது ஆசையை கூறியுள்ளார் ஷாகா குமாரி. இது அருணுக்கு மேலும் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதை அடுத்து ஷாகா குமாரியை கொலைச் செய்ய திட்டமிட்டார் அருண். 2020-ம் ஆண்டு டிசம்பர் 25-ம் தேதி, அருண் தனது வீட்டில் நண்பர்களுடன் கிறிஸ்துமஸ் கொண்டாடினார்.

நண்பர்கள் சென்ற பிறகு ஷாகா குமாரியின் கழுத்தை நெரித்துள்ளார். ஷாகாகுமாரி மயங்கியதும் மின்சாரம் பாய்ச்சி அவரை கொலை செய்துள்ளார்.

அவர் இறந்தநிலையில், மின்சாரம் தாக்கி இறந்ததாக நம்பவைப்பதற்காக அலங்கார சீரியல் லைட்டுகளை ஷாகா குமாரி உடல்மீது சுற்றிவைத்துள்ளார் அருண்.

சடலம்

மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அப்பகுதியினர் கூறியதை அடுத்தே போலீஸார் விசாரணை நடத்தி ஷாகாகுமாரி கொலை செய்யப்பட்டதை உறுதிசெய்தனர். இதையடுத்து அருண் கைதுசெய்யப்படார்.

அருண் சொத்துக்கு ஆசைப்பட்டு தன்னைவிட சுமார் 25 வயது அதிகமான பெண்ணை காதலித்து, பெற்றோருக்கு கூட தெரியாமல் திருமணம் செய்தது விசாரணையில் தெரியவந்தது.

இந்த வழக்கு நெய்யாற்றின்கரை அடிஷனல் டிஸ்ட்ரிக் கோர்டில் நடந்துவந்தது. வழக்கை விசாரித்த கோர்ட் அருணுக்கு ஆயுள்தண்டனை விதித்ததுடன் 2 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கியது.

ஸ்ரீவில்லிபுத்தூர்: கல்லூரி விடுதியில் மாணவர் மர்ம மரணம்.. போலீஸார் விசாரணை!

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கல்லூரி விடுதியில் மாணவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கிருஷ்ணன்கோவில் பகுதியில் தனியார் பல்கலைக்... மேலும் பார்க்க

தென்காசி: சொத்துவரி ரசீது கொடுக்க ரூ.15000 லஞ்சம் வாங்கிய நகராட்சி வருவாய் உதவியாளர் கைது!

சொத்துவரி போட்டுத் தருவதற்கு ரூ.15 ஆயிரம் லஞ்சம் பெற்ற வருவாய் உதவியாளரை லஞ்ச ஒழிப்பு போலீஸார் கைது செய்தனர். தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே உள்ள வடுகப்பட்டி, தெற்குசத்திரத்தை சேர்ந்தவர் காளிராஜன் (வ... மேலும் பார்க்க

பட்டுக்கோட்டை: பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சிறுமி - தொழிலதிபர் மீது போக்சோவில் வழக்கு பதிவு

பட்டுக்கோட்டை அருகே உள்ள வீரக்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் அருள் சூசை(55). திருமணம் ஆனவர். தொழில் அதிபரான இவர் துபாய் நாட்டில் பல்வேறு தொழில்கள் செய்து வருவதாக சொல்லப்படுகிறது. மேலும் இவருக்கு சொந்தம... மேலும் பார்க்க

`Real Dragon' நேர்முகத்தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து `IT வேலை' பெற்ற நபர் - சிக்கியது எப்படி?

இந்த ஆண்டு வெளியான டிராகன் படத்தில் வருவதுபோல தெலங்கானாவைச் சேர்ந்த இளம் இஞ்சினியர் ஒருவர் நேர்முகத்தேர்வில் மோசடி செய்து இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் வேலை பெற்றுள்ளார்.ஆன்லைன் நேர்முகத்தேர்வில் வெற்றி பெற... மேலும் பார்க்க

திருப்பூர் அரசு மருத்துவமனை: சிகிச்சைக்குப் பயந்த இளைஞர்; 4-வது மாடியில் இருந்து குதித்து பலி

மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்தவர் விபாஸ் பன்வான்(30). இவர், மேற்கு வங்கத்தில் இருந்து கேரளத்துக்கு பணிக்குச் செல்வதற்காக ரயிலில் வந்துள்ளார். திருப்பூர் அருகே கூலிபாளையம் ரயில் நிலையத்தில், ரயில் வந்த... மேலும் பார்க்க

``எல்லா வலியை தாங்கியும் அது நடக்கல..'' - கீர்த்திகா உடலை பார்த்து அக்கா, தம்பி கதறிய சோகம்

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே உள்ள நடுக்காவேரி, அரசமரத் தெருவைச் சேர்ந்தவர் அய்யாவு (55) பட்டியலினத்தை சேர்ந்தவர். இவரது மனைவி சாந்தி. இவர்களுக்கு துர்கா (34), மேனகா (29), கீர்த்திகா (27), தினேஷ... மேலும் பார்க்க