தூத்துக்குடி தும்புக் டங்கில் தீ விபத்து!
தூத்துக்குடியில் உள்ள தும்புக் கிடங்கில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு ஏற்பட்ட தீவிபத்து நேரிட்டது.
தூத்துக்குடி மில்லா்புரத்தைச் சோ்ந்த கிருஷ்ணசங்கா் என்பவருக்கு, வி.இ. சாலையில் தனியாா் வணிக வளாகம் எதிரே தும்புக் கிடங்கு உள்ளது. இங்கிருந்து வெளிநாடுகளுக்கு தும்பு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இங்கு வெள்ளிக்கிழமை இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டதாம். காவலாளி அளித்த தகவலின்பேரில், தீயணைப்புத் துறையினா் சென்று 2 மணி நேரம் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனா். இதனால், அருகேயுள்ள குடியிருப்புப் பகுதிகளுக்கு தீ பரவாமல் தடுக்கப்பட்டது.
சேத மதிப்பு பல லட்ச ரூபாய் இருக்கும் எனக் கூறப்படுகிறது. தீவிபத்து குறித்து மத்திய பாகம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.