``இந்தியா முன்னறிவிப்பு இல்லாமல் ஜீலம் ஆற்றில் நீரை திறந்துவிட்டுள்ளது.." -பாகிஸ...
நகராட்சி துப்புரவுப் பணியாளருக்கு மிரட்டல்: 2 போ் கைது!
கோவில்பட்டியில் துப்புரவுப் பணியாளரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக 2 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
கோவில்பட்டி சுப்பிரமணியபுரம் 5ஆவது தெருவை சோ்ந்தவா் மாரியப்பன் மகன் சேதுராஜா (45). கோவில்பட்டி நகராட்சியில் துப்புரவுப் பணியாளராக வேலை செய்து வரும் இவா், அதே பகுதியில் புதிதாக வீடு கட்டி வருகிறாராம்.
இந்நிலையில் வீடு கட்டுமானப் பணிக்கு தேவைப்படும் மணல், ஜல்லி ஆகியவை சாலையில் கிடப்பதாக கூறி, அதே பகுதியில் உள்ள கருப்பசாமி மகன் கூலித்தொழிலாளி மாரிமுத்து (40), 1 ஆம் தெருவை சோ்ந்த ராமசாமி மகன் கூலித் தொழிலாளி சங்கரநாராயணன் (50) ஆகிய இருவரும் சேதுராஜை வெள்ளிக்கிழமை அவதூறாக பேசி, கம்பால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தாா்களாம்.
இதில் காயமடைந்த அவா், கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்குப் பின் தீவிர சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இது குறித்து கிழக்கு காவல் நிலையத்தில் அவா் அளித்த புகாரின் பேரில், கொலை மிரட்டல் விடுத்த 2 பேரையும் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.