அக்ஷய திருதியை: விலை உச்சம் தொட்டாலும் தங்க நகை முன்பதிவுக்கு மக்கள் ஆா்வம்!
அரசியல் சாசனத்தை சிதைக்கிறது பாஜக: ப.சிதம்பரம்
சென்னை: பாஜக கொஞ்சம் கொஞ்சமாக அரசியல் சாசனத்தை சிதைக்கிறார்கள் என முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.
சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற அம்பேத்கர் பிறந்தநாள் விழாவில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கலந்துகொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது:
கடந்த தேர்தலுக்கு முன்னாள் 400 இடங்களை பெறப்போவதாக பாஜக சபதம் எடுத்தது. அந்த சபதம் மட்டும் நிறைவேறி இருந்தால் மக்களவையில் 400 இடங்களை பாஜக வென்றிருந்தால் மக்கள் அளித்திருந்தால் அரசியல் சாசனத்தை தகர்த்து எறிந்திருப்பார்கள். ஆக்கிரமிப்பு என்ற பெயரில் புல்டோசர்களை வைத்து வீடுகளை எல்லாம் இடிக்கிறார்களே அதேபோல ஒரே வாரத்தில் அரசியல் சாசனத்தை தகர்த்து தூக்கி எறிந்து இதற்கு இரண்டாவது குடியரசு இதற்கு புதிய அரசியல் சாசனம் என்று பாஜக அரசு நிச்சயம் செய்திருக்கும். அதில் எந்தவித சந்தேகத்திற்கும் இடமில்லை.
ஆனால், இந்திய மக்கள் 400 இடங்களை கொடுக்கவில்லை. மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையை கூட கொடுக்கவில்லை. மக்களவையில் அருதிபெரும்பான்மையை கூட கொடுக்கவில்லை. 270-க்கு குறைவாக 240 இடங்களோடு நிறுத்திவிட்டார்கள். 240 இடங்களோடு நிறுத்திவிட்டதால் அரசியல் சாசனத்தை காப்பாற்றியதாக மக்கள் நினைக்கலாம்.
சோதனைகளை சாதனைகளாக மாற்றக்கூடியவர் முதல்வர் ஸ்டாலின்: கி. வீரமணி
ஆனால் மோடி தலைமையில் உள்ள அரசு ஆர்எஸ்எஸ் இயத்திலே இருக்கக்கூடிய பாஜக அவர்கள் வேறு திட்டத்தை வரையறுக்கிறார்கள்.
புல்டோசரை கொண்டுதானே அரசியல் சாசனத்தை தகர்க்க முடியவில்லை. உளி, சுத்தியலை வைத்து கொஞ்சம் கொஞ்சமாக உடைக்கலாம் என்றுதான் கடந்த ஒரு ஆண்டில் குடியுரிமை திருத்தச் சட்டம், வக்ஃபு சட்டம், கல்வி உரிமையை சிதைப்பது என பல சட்டங்களை மூலம் கொஞ்சம் கொஞ்சமாக சிதைக்கிறார்கள் என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
புல்டோசரை வைத்து சிதைத்தால் அனைவருக்கும் தெரிந்துவிடும் என்பதற்காக நின்று நிதானித்து திட்டமிட்டு கொஞ்சம் கொஞ்சமாக வைத்து சிதைத்து வருகிறார்கள். நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
குடியேற்றச் சட்டம் ஒன்றை கொண்டு வந்துள்ளார்கள், அதுவும் அரசியலமைப்பையும், தனிநபர் உரிமையையும் சிதைப்பது தான். அரசியல் சாசனத்தை சிதைத்து வருகிறார்கள் என சிதம்பரம் கூறினார்.