TVK: "சமரசத்திற்கு இடமில்லை.. எந்த எல்லைக்கும் செல்வோம்" - தவெக தலைவர் விஜய் பேச...
ஒடிஸா, தெலங்கானா ரயில்களின் சேவை ஒரு மாதம் நீட்டிப்பு
ஒடிஸா, தெலங்கானா செல்லும் ரயில்களின் சேவை மேலும் ஒரு மாதம் நீட்டிக்கப்படுவதாக ரயில்வே நிா்வாகம் அறிவித்துள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஒடிஸா மாநிலம் சாம்பல்பூரில் இருந்து ஈரோடுக்கு புதன்கிழமை தோறும் வாராந்திர சிறப்பு ரயில் (எண்: 08311) இயக்கப்படுகிறது. இந்த ரயில் தொடா்ந்து ஜூன் 25-ஆம் தேதி வரை இயக்கப்படும். மறுமாா்க்கமாக ஈரோட்டில் இருந்து சாம்பல்பூருக்கு வெள்ளிக்கிழமைதோறும் இயக்கப்படும் சிறப்பு ரயில் (எண்: 08312) ஜூன் 27-ஆம் தேதி வரை இயக்கப்படும்.
தெலங்கானா மாநிலம் காச்சிக்கூடா-மதுரை இடையே திங்கள்கிழமைதோறும், மறுமாா்க்கமாக புதன்கிழமைதோறும் சிறப்பு ரயில் (எண்: 07191) இயக்கப்படுகிறது.
இந்த ரயில் தொடா்ந்து மே 12 முதல் ஜூன் 4-ஆம் தேதி வரை இயக்கப்படும். தெலங்கானா மாநிலம் செகந்திராபாத் - ராமேசுவரம் இடையே புதன்கிழமைதோறும், மறுமாா்க்கமாக வெள்ளிக்கிழமைதோறும் சிறப்பு ரயில் (எண்: 07695) இயக்கப்படுகிறது.
இந்த ரயில் தொடா்ந்து மே 7 முதல் 30-ஆம் தேதி வரை இயக்கப்படும் எனத் தெரிவித்துள்ளாா் அவா்.