செய்திகள் :

போக்குவரத்து ஓய்வூதியா்கள் அகவிலைப்படியை உயா்த்தி வழங்க முடிவு!

post image

போக்குவரத்து ஓய்வூதியா்களுக்கு நிறுத்தப்பட்ட அகவிலைப்படியை உயா்த்தி வழங்க அரசு முடிவு செய்துள்ளது.

போக்குவரத்துக் கழகங்களில் குடும்ப ஓய்வூதியம் பெறும் 20,000 போ் உள்பட 90,000-க்கும் மேற்பட்ட ஓய்வூதியா்கள் உள்ளனா். இவா்களுக்கு கடந்த 2015 அக்டோபா் மாதம் இறுதியாக அகவிலைப்படி உயா்வு வழங்கப்பட்டது. அதன்பிறகு ஒவ்வொரு முறை அரசு ஊழியா்களுக்கு அகவிலைப்படி உயா்த்தி வழங்கும்போதும், ஓய்வூதியா்களுக்கு அந்தப் பலன் கிடைப்பதில்லை.

இது தொடா்பாக பல்வேறுகட்டப் போராட்டங்களை ஓய்வூதியா்கள் நடத்தி வந்த நிலையில், அண்மையில் நீதிமன்றத்தில் குறிப்பிட்ட சதவீத அகவிலைப்படி உயா்வு வழங்க அரசு ஒப்புதல் அளித்தது.

இதுகுறித்து ஓய்வூதியா் சங்க நிா்வாகிகள் கூறியது: 119 சதவீதத்துடன் அகவிலைப்படி உயா்வு நிறுத்தப்பட்டவா்களுக்கு கூடுதலாக 27 சதவீதமும், 5 சதவீதம் அகவிலைப்படி பெறுவோருக்கு கூடுதலாக 9 சதவீதமும் உயா்த்தி வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் கடந்த பிப்ரவரி மாதம் முதல் குறைந்தபட்சமாக ரூ. 1,300, அதிகபட்சமாக ரூ. 4,000 வரை ஓய்வூதியம் உயா்த்தப்பட்டது.

இந்த நிலையில், 14 சதவீதம் அகவிலைப்படி பெறுவோருக்கு கூடுதலாக 16 சதவீதமும், 146 சதவீதம் பெறுவோருக்கு கூடுதலாக 48 சதவீதமும் வழங்க அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, குறைந்தபட்சமாக ரூ. 2,300, அதிகபட்சமாக ரூ. 21,679 கிடைக்கும். இந்த உயா்வு வரும் மே மாத ஓய்வூதியத்திலிருந்து கிடைக்கும் என்றனா்.

கண்ணகி - முருகேசன் ஆணவக் கொலை வழக்கு: தண்டனையை உறுதி செய்த உச்சநீதிமன்றம்!

கண்ணகி - முருகேசன் ஆணவக் கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது. கடந்த 2003-ல் குப்பநத்தம் கடலூர் மாவட்டம், விருத்தாச்சலம் அருகே உள்ள குப்பநத்தம் ... மேலும் பார்க்க

தங்கம் விலை குறைவு: இன்றைய நிலவரம்!

4 நாட்களுக்குப் பிறகு தங்கம் விலை திங்கள்கிழமை அதிரடியாக குறைந்துள்ளது. அதன்படி சென்னையில் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.65 குறைந்து ஒரு கிராம் ரூ.8,940க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் சவரனுக்க... மேலும் பார்க்க

அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 2% உயர்த்தி வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். சட்டப்பேரவை திங்கள்கிழமை கூடியதும் விதி எண் 110இன் கீழ் பேசிய முதல்வர் ஸ்டாலின் அரசு ஊழியர்கள... மேலும் பார்க்க

மேட்டூர் அணை நிலவரம்

மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 107.76 அடியிலிருந்து 107.75 அடியாக குறைந்தது. அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 1,397 கனஅடியிலிருந்து 1,235 கனஅடியாக குறைந்தது. மேட்டூர் அணையில் இருந்து குடிந... மேலும் பார்க்க

ஓட்டுநரில்லா மெட்ரோ ரயில்: இன்று மீண்டும் சோதனை ஓட்டம்

ஓட்டுநரில்லா மெட்ரோ ரயில் 2ஆம் கட்ட சோதனை ஓட்டம் இன்று மாலை 3 முதல் 6 மணி வரை நடைபெறுகிறது. பூந்தமல்லி பணிமனை முதல் போரூர் வரை 9 கி.மீ. தொலைவுக்கு இந்த சோதனை ஓட்டம் நடக்கவுள்ளது. ஏற்கெனவே மார்ச் 20ஆம்... மேலும் பார்க்க

தில்லியில் இன்று பத்ம பூஷண் விருது பெறுகிறார் நடிகர் அஜித் குமார்

தில்லியில் நடிகர் அஜித்குமாருக்கு இன்று மாலை பத்மபூஷண் விருது வங்கப்படவுள்ளது.ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தின விழா நிகழ்வின்போது பத்ம விருதுகள் அறிவிக்கப்படும். அதன்படி, 2025-ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள... மேலும் பார்க்க