செய்திகள் :

சிம்பு - 49 படத்தில் இணைந்த கயாது லோஹர்!

post image

நடிகர் சிம்புவின் 49-வது படத்தில் நடிகை கயாது லோஹர் இணைந்துள்ளார்.

நடிகர் சிலம்பரசனின் 42-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அவரது 49-ஆவது திரைப்படத்தின் அறிவிப்பு போஸ்டர் வெளியானது. தற்காலிகமாக இந்தப் படத்துக்கு ’எஸ்டிஆர் - 49’ எனக் குறிப்பிட்டுள்ளனர்.

’பார்க்கிங்’ திரைப்படத்தை இயக்கிய ராம்குமார் பாலகிருஷ்ணன் இந்தப் படத்தினை இயக்குகிறார். சாய் அபயங்கர் இசையமைக்கிறார்.

டான் பிக்சர்ஸ் தயாரிக்கும், இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற ஜூன் மாதம் துவங்கும் என நடிகர் சிம்பு தெரிவித்துள்ளார். நீண்ட காலம் கழித்து சந்தானமும் காமெடியனாக இப்படத்தில் நடிக்கிறார்.

இந்த நிலையில், இப்படத்தின் நாயகியாக நடிகை கயாது லோஹர் இணைந்துள்ளதைத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

சமந்தா தயாரித்து, நடித்த படத்தின் டிரைலர்!

நடிகை சமந்தா தயாரிப்பாளராக அறிமுகமாகும் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா, சுபம் படத்தின் மூலம் தயாரிப்பாளராகக் களமிறங்கியுள்ளார். இதில் நாய... மேலும் பார்க்க

படை தலைவன் வெளியீட்டுத் தேதி!

நடிகர் சண்முக பாண்டியன் நடித்த படை தலைவன் படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.நடிகர் விஜய்காந்த்தின் மகன் சண்முக பாண்டியன் படை தலைவன் என்கிற படத்தில் நடித்து முடித்துள்ளார்.ஜகநாதன் பரமசிவம... மேலும் பார்க்க

மூன்றாவது குழந்தையைத் தத்தெடுத்த ஸ்ரீலீலா!

நடிகை ஸ்ரீலீலா மீண்டும் ஒரு குழந்தையைத் தடுத்தெடுத்துள்ளார். அமெரிக்காவில் பிறந்த ஸ்ரீலீலா பெங்களூரில் வளர்ந்தவர். மருத்துவ படிப்பினை முடித்தவருக்கு நடனம் மற்றும் நடிப்பில் அதிக ஆர்வம் இருந்தாதால் திர... மேலும் பார்க்க

பாகிஸ்தானுக்கு ஆதரவளித்தேனா? விஜய் ஆண்டனி விளக்கம்!

காஷ்மீர் படுகொலை குறித்த தன் கருத்து தவறாக புரிந்துகொள்ளப்பட்டதாக விஜய் ஆண்டனி விளக்கமளித்துள்ளார். ஜம்மு - காஷ்மீரிலுள்ள பஹல்காம் சுற்றுலா தலத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை பாகிஸ்தானிலிருந்து ஊடுருவியதா... மேலும் பார்க்க

சுதா கொங்காரா இயக்கத்தில் சிம்பு?

நடிகர் சிம்பு இயக்குநர் சுதா கொங்காரா இயக்கத்தில் நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இறுதிச்சுற்று படத்தை இயக்கிய சுதா கொங்காராவின் சூரரைப் போற்று படத்தில் கதாநாயகனாக நடித்த சூர்யாவுக்கு மிகப் பெ... மேலும் பார்க்க

சபலென்கா வெற்றி; பெகுலா, பாலினிக்கு அதிா்ச்சி!

ஸ்பெயினில் நடைபெறும் மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியில், உலகின் நம்பா் 1 வீராங்கனையான பெலாரஸின் அரினா சபலென்கா காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு ஞாயிற்றுக்கிழமை முன்னேறினாா். மகளிா் ஒற்றையா் 3-ஆவது சுற்ற... மேலும் பார்க்க