டி20 கிரிக்கெட்டில் பார்ட்னர்ஷிப்பின் முக்கியத்துவத்தை மறந்துவிடுகிறார்கள்: விரா...
Travel Contest : 'மணிக்கு 431 கி.மீ' - உலகின் அதிவேக ரயிலில் பயணம்; சீன சுற்றுலா அனுபவம்
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்
நாங்கள் சீன நாட்டின் ஷாங்காய் நகரம் சென்றிருந்த போது ஷாங்காயில் கைடு காந்த ரயில் பற்றிச் சொன்னார். அவர் சொல்லச் சொல்ல அதிசயமாகக் கேட்டுக் கொண்டிருந்தோம்.
உடனே நாங்கள் அந்த ரயிலில் பயணிக்க முடியுமா என்று கேட்டோம். ஏன் என்றால் அது எங்கள் பயணத் தொடரில் இல்லை.
உடனே ஏற்பாடு பண்ணினார். எங்களிடம் டிக்கெட்டுக்காக பணம் வசூல் பண்ணினார்.

லாங்க்யாங் சாலை ஸ்டேஷனில் இருந்து புடாங் ஸ்டேஷன் வரை 30 கி.மீ., 7 நிமிடத்தில் போய் விடுகிறது. ஒவ்வொரு நேரத்தில் ஒவ்வொரு வேகம். 431KM/H அது 3 1/4 மணியோடு முடிகிறது.
ஆகவே 3 மணி இருக்கும் பொழுது ஓடினோம். சைனா நம் நாடு மாதிரிதான் கொஞ்சம் RULES BREAK பண்ணிக்கொள்ளலாம். ஆகவே கடைசி நிமிடத்தில் போய் ஏறிக் கொண்டோம். அடுத்த ரயில் 300KM/H க்கு போய் விடும். மிக நன்றாக இருந்தது.
அந்த வேகம் ரயிலின் உள்ளே ஒரு துளி கூட தெரியவில்லை. எதிரில் வரும் ரயில் ஒரு புள்ளியாகத்தான் தெரிகிறது. ஏன் என்றால் speed 431+431 =862km/h சரியாக 7 நிமிடம். பிறகு அதே TRAIN ல் திரும்பி விட்டோம்.

RAILWAY TRACK தகடுதான். WHEEL கிடையாது. தண்டவாளம் இல்லை. TRAIN PUSH AND PULL METHODல் தரை தொடாமல் போகிறது. ஒரு வித்தியாசமான அனுபவம்.
1902 - ஜெர்மனியைச் சேர்ந்த ஆல்ஃபிரட் ஜெஹ்டன் கண்டுபிடித்த முதல் காந்த ரயில்.
வேலை செய்யும் விதம்:
ரயில் மேலே தூக்கப்பட்டவுடன், வழிகாட்டிப் பாதைச் சுவர்களில் உள்ள சுருள்களுக்கு மின்சாரம் வழங்கப்படுகிறது. இது வழிகாட்டிப் பாதை வழியாக ரயிலை இழுத்துத் தள்ளும் ஒரு தனித்துவமான காந்தப்புல அமைப்பை உருவாக்குகிறது.

வழிகாட்டிப் பாதைச் சுவர்களில் உள்ள சுருள்களுக்கு வழங்கப்படும் மின்சாரம் காந்தமாக்கப்பட்ட சுருள்களின் துருவ முனைப்பை மாற்றத் தொடர்ந்து மாறி மாறி வருகிறது.
My Vikatan-க்கு உங்களது `சுற்றுலா' கட்டுரை

இனி வாசகர்கள் விகடன் அறிவிக்கும் மாதாந்திர தலைப்பை மையப்படுத்தி கட்டுரைகள் அனுப்பலாம்.
இந்த மாதத்திற்கான தலைப்பு - `சுற்றுலா'. சுற்றுலா என்கிற தலைப்பில் My Vikatanக்கு உங்களது கட்டுரை படைப்புகளை அனுப்பலாம். நீங்க சுற்றுலா போன அனுபவமாக இருக்கலாம், பார்க்க வேண்டிய தலங்களாக இருக்கலாம், சுற்றுலா போகும் போது செய்ய வேண்டிய ஏற்பாடுகள் குறித்த தகவல்களாகவும் இருக்கலாம். ஆனால், உங்களின் சொந்த படைப்பாக, இதுவரை எந்த தளத்திலும் வெளிவராத படைப்பாக இருக்க வேண்டும், புகைப்படங்களுடன் அனுப்பவேண்டும். தேர்வு செய்யப்படும் கட்டுரைகள் அனைத்தும் பிரசுரம் ஆகும்.
வாசகர்களை உற்சாகப்படுத்தும் நோக்கில், இந்த மாதம் அனுப்பப்படும் பயணக் கட்டுரைகளில் சிறந்த கட்டுரைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசுத் தொகை வழங்கப்பட உள்ளது.
பரிசுத்தொகை விவரம்:
முதல் பரிசு : ரூ. 2,500 (2 வெற்றியாளர்கள்)
இரண்டாம் பரிசு : ரூ. 1000 (5 வெற்றியாளர்கள்)
நினைவுப் பரிசு: ₹500 (10 வெற்றியாளர்கள்)
நினைவில் கொள்க:
நீங்க கட்டுரையை அனுப்ப வேண்டிய கடைசி நாள் ஏப்ரல் 20, 2025
ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கட்டுரைகளை அனுப்பலாம்.
உங்கள் படைப்புகளை: my@vikatan.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்
விகடனுக்கு என்று பிரத்யேகமாக அனுப்பப்படும் கட்டுரைகள் மட்டுமே பரிசீலிக்கப்படும்
உங்கள் படைப்பை திருத்தவோ, பிரசுரிக்கவோ, நிராகரிக்கவோ முழு உரிமையும் விகடனுக்கு இருக்கிறது.
கட்டுரையின் தரத்தின் அடிப்படையில் வெற்றியாளர்கள் விகடன் நடுவர் குழுவால் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.