இந்திய அணியின் விக்கெட் கீப்பருக்கு கே.எல்.ராகுல்தான் எனது முதல் தெரிவு: கெவின் ...
தைஜுல் இஸ்லாம் அபார பந்துவீச்சு; முதல் நாளில் ஜிம்பாப்வே 227 ரன்கள் குவிப்பு!
வங்கதேசத்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் ஜிம்பாப்வே அணி 9 விக்கெட்டுகளை இழந்து 227 ரன்கள் எடுத்துள்ளது.
வங்கதேசம் மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி சட்டோகிராமில் இன்று (ஏப்ரல் 28) தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து முதல் இன்னிங்ஸில் விளையாடி வருகிறது.
இதையும் படிக்க: இவர்கள் மூவரும் இங்கிலாந்துக்கு சவாலளிப்பார்கள்; ரவி சாஸ்திரி கூறுவதென்ன?
தைஜுல் இஸ்லாம் அபாரம்; ஜிம்பாப்வே - 227/9
வங்கதேசத்துக்கு எதிராக டாஸ் வென்று முதல் இன்னிங்ஸில் விளையாடி வரும் ஜிம்பாப்வே அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 227 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணியில் அதிகபட்சமாக சீன் வில்லியம்ஸ் 67 ரன்களும், நிக் வெல்ச் 54 ரன்களும் எடுத்தனர். அவர்களைத் தொடர்ந்து, பிரையன் பென்னட் மற்றும் பென் கரண் தலா 21 ரன்கள் எடுத்தனர்.
வங்கதேசம் தரப்பில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய தைஜுல் இஸ்லாம் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். நயீம் ஹாசன் 2 விக்கெட்டுகளையும், தன்சிம் ஹாசன் ஷகிப் ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
டஃபாட்ஸ்வா சிகா 18 ரன்களுடனும், பிளெஸ்ஸிங் முஸராபானி 2 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.