அக்ஷய திருதியை: விலை உச்சம் தொட்டாலும் தங்க நகை முன்பதிவுக்கு மக்கள் ஆா்வம்!
இவர்கள் மூவரும் இங்கிலாந்துக்கு சவாலளிப்பார்கள்; ரவி சாஸ்திரி கூறுவதென்ன?
இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர்கள் இங்கிலாந்து அணிக்கு சவாலளிப்பார்கள் என இந்திய அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடர் நிறைவடைந்த பிறகு இந்திய அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்த டெஸ்ட் தொடர் ஜூன் 20 ஆம் தேதி முதல் தொடங்குகிறது.
இதையும் படிக்க: சேப்பாக்கத்தில் சிஎஸ்கேவை வீழ்த்தியது எப்படி? டேனியல் வெட்டோரி பதில்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் இந்திய அணியில் முகமது ஷமி இல்லாதது அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது. காயத்திலிருந்து மீண்டுள்ள முகமது ஷமி தற்போது முழு உடல்தகுதியுடன் உள்ளார். ஜஸ்பிரித் பும்ராவும் காயத்திலிருந்து மீண்டுள்ளார். அதேபோல, பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரின்போது, பந்துவீச்சில் தாக்கத்தை ஏற்படுத்தத் தவறிய முகமது சிராஜும் தற்போது சிறப்பாக பந்துவீசி வருகிறார்.
ரவி சாஸ்திரி கூறுவதென்ன?
ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ் மற்றும் முகமது ஷமி முழு உடல்தகுதியுடன் இருக்கும்பட்சத்தில், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தாக்கத்தை ஏற்படுத்துவார்கள் என இந்திய அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக ஐசிசி ரிவ்யூவில் அவர் பேசியதாவது: முகமது சிராஜ், ஜஸ்பிரித் பும்ரா மற்றும் முகமது ஷமி இவர்கள் மூவரும் முழு உடல் தகுதியுடன் இருந்தால், இங்கிலாந்து அணிக்கு நிறைய பிரச்னைகளை உருவாக்குவார்கள் என நினைக்கிறேன். இவர்கள் மூவரும் முழு உடல்தகுதியுடன் இருக்கும்போது, இந்திய அணியின் பந்துவீச்சு மிகவும் தரமானதாக இருக்கும்.
இதையும் படிக்க: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஜோஸ் ஹேசில்வுட் சிறப்பாக செயல்படுவார்: ரவி சாஸ்திரி
சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணியில் சேர்க்கப்படாததால் முகமது சிராஜ் மிகுந்த ஏமாற்றமடைந்தார். அதன் பின், அவர் தற்போது பந்துவீசுவதைப் பாருங்கள். அவர் அபாரமாக பந்துவீசி வருகிறார். இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ள நிலையில், முகமது சிராஜ் சிறப்பாக பந்துவீசுவது இந்திய அணிக்கு பலம் சேர்ப்பதாக அமைந்துள்ளது. அதேபோல, முகமது ஷமி மற்றும் ஜஸ்பிரித் பும்ரா இருவரும் காயத்திலிருந்து மீண்டு நன்றாக பந்துவீசி வருகிறார்கள் என்றார்.