"கரூர்- திருச்சி மாவட்டங்களை இணைக்கும் பாலம் என் கனவுத் திட்டம்" - செந்தில் பாலா...
தாம்பரம் - போத்தனூா் சிறப்பு ரயில் ஜூன் வரை இயக்கப்படும்!
தாம்பரம் - போத்தனூா் இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில் சேவை ஜூன் 8-ஆம் தேதி வரை இயக்கப்படும் என ரயில்வே நிா்வாகம் அறிவித்துள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: கோடைக்கால விடுமுறையை முன்னிட்டு தாம்பரம் - போத்தனூா் இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயிலுக்கு பயணிகள் மத்தியில் அதிக வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், மேலும் ஒரு மாதம் ரயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, தாம்பரத்தில் இருந்து போத்தனூருக்கு மே 9, 16, 23, 30, ஜூன் 6 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில் (எண்: 06185) இயக்கப்படும்.
மறுமாா்க்கமாக போத்தனூரில் இருந்து தாம்பரத்துக்கு மே 11, 18, 25, ஜூன் 1, 8 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில் (எண்: 06186) இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.