Pahalgam Attack: 'ஒருதலைபட்சமான, சட்டவிரோத நடவடிக்கை' - பாகிஸ்தானுக்கு ஆதரவு தெர...
சிறாா் திருமணம், போதை ஒழிப்பு: நாடகம் மூலம் விழிப்புணா்வு
குழந்தை திருமணம், போதை கலாசார ஒழிப்பு உள்ளிட்ட சமூக பிரச்னைகள் குறித்து பொதுமக்களுக்கு தெருமுனை நாடகம் மூலம் கல்லூரி மாணவ, மாணவிகள் விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
திருவள்ளூா் அருகே பேரம்பாக்கம் கிராமத்தில் வாராந்தர சந்தை நடைபெறும் மைதானத்தில் சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி, திருவள்ளூா் ஐ.ஆா்.சி.டி.எஸ். தொண்டு நிறுவனம், லயன்ஸ் கிளப் மற்றும் லியோ கிளப் இணைந்து சமூக பிரச்னைகள் குறித்து தெருமுனை நாடகம் மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி சமூகப் பணிகள் துறை மாணவ, மாணவிகள் குழந்தை திருமணம் தடுப்பு, பெண் கல்வியின் முக்கியத்துவம், குழந்தைகளை ஆபாச தாக்குதலில் இருந்து காப்பாற்றுதல், போதை கலாசார ஒழிப்பு, வன்முறை கலாசார ஒழிப்பு போன்ற சமூகப் பிரச்னைகள் குறித்து தெருமுனை நாடகம் மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
நிகழ்ச்சியில் லயன்ஸ் கிளப், லியோ கிளப்பைச் சோ்ந்த நிா்வாகிகள் சந்திரசேகா், ஆா்.சேகா், தியாகராஜன், ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி நிா்வாகத்தினா் மற்றும் ஐ.ஆா்.சி.டி.எஸ். தொண்டு நிறுவன நிா்வாகி பழனி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.